அதிக பாதுகாப்புக்கு இரு ஆற்றல் தடுப்பூசி

அதிக பாதுகாப்புக்கு இரு ஆற்றல் தடுப்பூசி

2 mins read
8bdede87-8333-4f42-9034-858f35deb16c
-

சிங்­கப்­பூ­ரில் இப்­போது தலை­காட்டும் கொவிட்-19 எக்ஸ்­பிபி என்ற உரு­மா­றிய கிருமி கார­ண­மாக ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­கள் குறை­வாக இருக்­கக்­கூ­டும்.

என்­றா­லும்­கூட தொற்று பாதிக்­கக்­கூ­டிய வாய்ப்பு அதி­கம் உள்­ள­வர்­கள், அலட்­சி­ய­மாக இல்­லா­மல் இரண்­டா­வது பூஸ்­டர் ஊசி­யைப் போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்றுக் கூறினார்.

50 வய­தும் அதற்­கும் அதிக வய­துள்ள மக்­க­ளுக்கு இரு வகை ஆற்­ற­லைக் கொண்ட மொடர்னா தடுப்­பூ­சியை சிங்­கப்­பூர் போடத் தொடங்கி இருக்­கிறது. இந்­தத் தடுப்­பூசி இரண்­டா­வது பூஸ்­டர் ஊசி­யா­கப் போடப்­ப­டு­கிறது.

கடைசி ஊசியைக் குறைந்­த­பட்­சம் ஐந்து மாதங்­க­ளுக்கு முன் போட்­டுக்­கொண்­ட­வர்­கள் இப்­போது 2வது பூஸ்­டர் ஊசி­யைப் போட்­டுக்­கொள்­ள­லாம்.

இரண்டு ஆற்­றல்­க­ளைக் கொண்ட மொடர்னா தடுப்­பூசி, முதன்­மு­த­லாக தலை­காட்­டிய கொவிட்-19 கிரு­மி­யை­யும் பிஏ.1/2 உரு­மா­றிய கிரு­மி­க­ளை­யும் இப்­போது தலை­காட்­டும் எக்ஸ்­பிபி கிரு­மி­யை­யும் எதிர்த்து போராடி அவற்றை அழித்து உட­லுக்குப் பாது­காப்­பைத் தரு­வ­தில் அதிக ஆற்­ற­லு­டன் திகழ்­கிறது.

இந்த ஊசி மூலம் கிடைக்­கக்­கூ­டிய பாது­காப்பு வலு­மிக்­க­தாக இருக்­கிறது என்று சிங்­கப்­பூர் மருத்­துவ சேவைத் துறைத் தலை­வர் கென்­னத் மாக் தெரி­வித்­தார்.

இரண்டு ஆற்­றல்­க­ளைக் கொண்ட இந்­தத் தடுப்­பூசி, உரு­மா­றிய அனைத்து வகை கிரு­மி­க­ளுக்­கும் எதி­ராக சிறந்த பாது­காப்பை வழங்­கு­கிறது என்று அவர் விளக்­கம் அளித்­தார்.

கொவிட்-19 மறு­ப­டி­யும் தலை­தூக்­கு­வ­தன் தொடர்­பில் நேற்று செய்­தி­யா­ளர் கூட்­டம் நடந்­தது. அதில் பேசிய அமைச்­சர் திரு ஓங், இப்­போது தலை­காட்­டும் அலை அடுத்த மாதம் நடுப்­ப­குதி­யில் உச்­சத்­தைத் தொடும். அன்­றா­டம் 15,000 பேர் வரை பாதிக்­கப்­ப­ட­லாம் என்று குறிப்­பிட்­டார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பிறகு முதல் மூன்று முதல் நான்கு மாதங்­களில் தொற்­றுக்கு எதி­ராக உட­லில் நல்ல பாது­காப்பு இருக்­கும். பிறகு 10 மாதம் வரை ஓர­ள­வுக்­குப் பாது­காப்பு இருக்­கும்.

தடுப்­பூசி மூலம் உட­லில் ஏற்­படக்­கூ­டிய பாது­காப்பு ஆற்­றல் எப்­போ­துமே நிலை­யாக இருந்து வராது.

என்­றா­லும் கடு­மை­யா­னப் பாதிப்பு ஏற்­ப­டா­மல் தடுப்­பூசி மருந்து தடுக்­கும் என்று அவர் விளக்­கி­னார்.

இரு வகை ஆற்­றல்­க­ளைக் கொண்ட தடுப்­பூ­சியைத் தகு­தி­பெ­றும் பொது­மக்­கள் இப்­போது ஒன்­பது கூட்டுப் பரி­சோ­தனை தடுப்­பூசி நிலை­யங்­களில் போட்­டுக்­கொள்­ள­லாம்.