சிங்கப்பூரர்கள் கூடியவிரைவில் பூச்சிகளைச் சாப்பிட அனுமதி வழங்கப்படலாம். இதன் மூலம் சிங்கப்பூரில் வண்டுகள், வெட்டுக்கிளிகள், தேனீக்கள் போன்ற பூச்சிகளை உண்ண முடியும். அவற்றை அப்படியே அல்லது வறுத்து சாப்பிடலாம். இதுகுறித்து சிங்கப்பூர் உணவு அமைப்பு கருத்துகள் கேட்டறிந்து வருகிறது. பூச்சிகள் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படலாம். சிலவகை பூச்சிகள் உள்ளூரில் வளர்க்கப்படும்.
பூச்சிகளை சாப்பிடுவதை அனுமதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள நடவடிக்கைகளைப் பின்பற்றியுள்ளதாக அமைப்பு கூறியது.
மனிதர்கள் சாப்பிடுவதற்காகப் பூச்சிகள் வளர்ப்பதை ஐக்கிய நாட்டின் உணவு, வேளாண்மை அமைப்பு ஊக்குவித்து வருகிறது.

