மனைவியின் நிர்வாண படத்தை சமூகத் தளத்தில் பகிர்ந்துகொண்ட தம்பதிக்கு அபராதம்

1 mins read
827e6668-281f-4084-9e37-68c62be01551
படம்: China Press -

பொது இடத்தில் புகைப்படத்திற்காக நிர்வாணமாக காட்சியளித்த தம்பதிக்கு $23,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இத்தம்பதி பொது இடத்தில் 18 முறை நிர்வாணமாக நின்று புகைப்படம் எடுத்ததாகக் கூறப்பட்டது.

ஜெஃப்ரி சு, 50 என்பவருக்கு $14,000 அபராதமும் அவருடைய மனைவியான 30 வயது குவென் தி ஆன்க்கு $9,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரின் பல பொது இடங்களில் குவென் நிர்வாணமாக நின்று புகைப்படம் எடுத்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. இந்தப் புகைப்படங்கள் சமூகத் தளமான 'டெலிகிராமில்' பகிரப்பட்டன. படங்களைப் பார்ப்பதற்கு கட்டணமும் வசூலிக்கப்பட்டது. இதன் மூலம் தம்பதி கிட்டத்தட்ட $11,207 பெற்றதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.