'மேமோகிராம்' பரிசோதனையால் 370,000 மாதர் பலன்

'மேமோகிராம்' பரிசோதனையால் 370,000 மாதர் பலன்

2 mins read
cbf2b73b-a7e7-4203-8937-02d8fbd0e49d
-

மானிய விலை­யில் 2002ஆம் ஆண்டு முதல் கிட்­டத்­தட்ட ஒரு மில்­லி­யன் 'மேமோ­கி­ராம்' பரி­சோ­த­னை­கள் செய்­யப்­பட்­ட­தில் சுமார் 370,000 மாதர் பய­ன­டைந்­துள்­ள­னர். அத்­து­டன் 4,800க்கும் மேற்­பட்­டோ­ருக்­குப் புற்­று­நோய் இருப்­ப­தும் கண்­ட­றி­யப்­பட்­டது.

சுகா­தார மேம்­பாட்டு வாரி­யத்­தின் 'வாழ்­நாள் பரி­சோ­தனை' திட்­டம் குறித்து மூத்த நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் ரஹாயு மஹ்­ஸாம் இத்­த­க­வல்­க­ளைத் தெரி­வித்­தார். மார்­ப­கப் புற்­று­நோயை ஆரம்­பக் கட்­டத்­தி­லேயே கண்­ட­றிந்­தோர் 90 விழுக்­காட்­டி­னர் என்று அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

'மேமோ­கி­ராம்' பரி­சோ­த­னை­களுக்கு 50 மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­து­டைய மாதர், ஈராண்­டுக்கு ஒரு­முறை செல்­வது முக்­கி­யம் என்று கூறப்­பட்­டது.

ஐந்­தாண்­டு­களில் மார்­ப­கப் புற்­று­நோய் சம்­ப­வங்­கள் ஏறத்­தாழ மூன்­றரை மடங்கு அதி­க­ரித்­து­விட்­ட­தாக 2019ன் சிங்­கப்­பூர் புற்று­நோய் பதி­வக அறிக்கை குறிப்­பி­டு­கிறது. குறிப்­பிட்ட வய­து­டைய சிலர், $5 அல்­லது அதற்­கும் குறை­வாக மானிய விலை­யில் 'வாழ்­நாள் பரி­சோ­தனை' திட்­டத்­திற்­குத் தகு­தி­பெ­ற­லாம்.

மாதர் சுகா­தா­ரக் குழு, சிங்­கப்­பூர் 'ஆஸ்­டி­யோ­பொ­ரோ­சிஸ்' சங்­கம் மற்­றும் மக்­கள் கழக மாதர் ஒருங்­கி­ணைப்­புக் கட்­ட­மைப்பு மன்­றத்­து­டன் இணைந்து 'ஆரோக்­கிய மாதர், ஆரோக்­கிய குடும்­பங்­கள்' திரு­வி­ழாவை நேற்று 'ஒன் பொங்­கோல்' பகு­தி­யில் தொடங்கி வைத்­தது. மாதர் தொடர்­பான முக்­கி­யச் சுகா­தா­ரப் பிரச்­சி­னை­களுக்­குக் குழு தீர்வு காண முனை­யும்.

மாத­ரி­டையே அதி­கம் கண்­டறி­யப்­படும் மற்­றொரு புற்­று­நோய் கர்ப்­பப்பை வாய் புற்­று­நோ­யா­கும் என்று குழுத் தலை­வ­ரா­க­வும் உள்ள திரு­வாட்டி ரஹாயு குறிப்­பிட்­டார். இக்­கு­றிப்­பிட்ட புற்­று­நோய்க்­கான பரி­சோ­த­னை­கள் குறைந்த எண்­ணிக்­கை­யில் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் இவ்­வாண்டு மார்ச் மாதத்­தில் தெரி­வித்­தி­ருந்­தது.

எலும்பு ஆரோக்­கி­யத்தை மேம்­ப­டுத்­து­வது மாதர் சுகா­தாரத்­தின் இன்­னொரு முக்­கிய அம்­ச­மா­கும் என்ற திரு­வாட்டி ரஹாயு, ஆண்­க­ளைக் காட்­டி­லும் இடுப்பு எலும்பு முறி­வு­க­ளா­லும் எலும்­புப்­பு­ரை­யா­லும் பாதிக்­கப்­படும் அபா­யம் மாத­ருக்கே அதி­கம் என்­றார். மாதர் தங்­கள் சுகா­தா­ரத்­தி­லும் தங்­கள் குடும்­பத்­தா­ரின் சுகா­தாரத்­தி­லும் கூடு­தல் பொறுப்­பேற்று ஆரோக்­கி­ய­மாக வாழ்­வது தொடர்­பில் மாதர் சுகா­தா­ரக் குழு தொடர்ந்து அதன் பங்­கா­ளி­க­ளு­டன் இணைந்து செயல்­படும்.