செய்திக்கொத்து

'மைஸ்' நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்

வெளிநாட்டவருக்கு நிம்மதி

'மைஸ்' எனப்படும் வர்த்தக நிகழ்வுகளில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும்போது தடுப்பூசி அடிப்படையிலான பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற நிலை இம்மாதம் 10ஆம் தேதிமுதல் மாறியுள்ளது. இதனால் வர்த்தக மாநாடுகளிலும் கண்காட்சிகளிலும் கலந்துகொள்ளும் வெளிநாட்டவர் மன அமைதி பெறலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, தங்களின் நாடுகளில் தடுப்பூசி போட்டோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அவர்கள் தங்களின் தடுப்பூசித் தகுதியைக் காட்ட வேண்டியிருந்தது, அல்லது 'மைஸ்' நிகழ்வுகளில் கலந்துகொள்ளவே முடியாத நிலை இருந்தது. இனி, இதுபோன்ற சிக்கல் அதிகம் இல்லாத சூழலில், மனிதவளப் பிரச்சினை தீரும், செலவுகளும் குறையும் என்று 'மைஸ்' நிகழ்வுகளின் ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நவம்பர் 14 முதல் இணையம்வழி

நிரந்தர அதிகாரப் பத்திர விண்ணப்பம்

நிரந்தர அதிகாரப் பத்திரம் (எல்பிஏ) தொடர்பான விண்ணப்பங்களை அடுத்த மாதம் 14ஆம் தேதி முதல் புதிய அரசாங்க இணையவாசல்வழி சமர்ப்பிக்க முடியும். எல்பிஏ தொடர்பான செயல்முறையைத் துரிதப்படுத்துவதும் எளிமைப்படுத்துவதும் இந்த மின்னியல் முறையின் நோக்கமாகும். மனநல ஆற்றலை ஒருவர் இழக்கும்போது அவர் சார்பாக மற்றொருவர் முடிவெடுக்கவும் செயல்படவும் 21 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒருவர் தன்னிச்சையாக செயல்படும் வகையில் அனுமதிப்பதே இந்த எல்பிஏ பத்திரமாகும். இந்த மாற்றத்தால் விண்ணப்பத்தை அங்கீகரிக்கும் அவகாசம் சுமார் ஒன்றரை வாரத்திற்குக் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்தோனீசியா, மலேசியாவுக்கான

படகுப் பயணத் தேவை அதிகரிப்பு

சிங்கப்பூரர்கள் அருகிலுள்ள இந்தோனீசியா, மலேசியா நாடுகளுக்குச் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை ஹார்பர்ஃபிரண்ட், தானா மேரா இடங்களில் உள்ள சிங்கப்பூரின் அனைத்துலக படகு முனையங்கள்வழி கிட்டத்தட்ட 1.1 மில்லியன் பேர் பயணித்துள்ளனர். கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன் பதிவான பயணிகள் எண்ணிக்கையில் ஏறத்தாழ 45 விழுக்காட்டைத் தற்போதைய நிலவரம் அடைந்துவிட்டதாக சிங்கப்பூர் சொகுசுக் கப்பல் நிலையம் தெரிவித்தது.

இதற்கிடையே, இவ்வட்டாரத்தில் மேலும் அதிக துறைமுகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதால் வட்டார நிலையில் உல்லாசக் கப்பல் பயணிகளுக்குக் கூடுதல் தெரிவுகள் அமையலாம் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!