'கிரிக்கெட்' எனப்படும் சிள்வண்டுகள், வண்டுகள், தேனீக்கள் போன்ற பூச்சி வகைகளை அப்படியே அல்லது வறுத்து, சிங்கப்பூரர்கள் சாப்பிடுவதற்குக் கூடிய விரைவில் அனுமதி வழங்கப்படலாம். மனிதன் உட்கொள்வதற்கும் கால்நடைகள் தின்பதற்கும் பூச்சிகளை அனுமதிப்பது தொடர்பில் உணவு மற்றும் விலங்கு உணவுத் துறையினரிடமிருந்து சிங்கப்பூர் உணவு அமைப்பு கருத்து திரட்டி வருகிறது.
குறிப்பிட்ட சில பூச்சி வகைகளை உட்கொள்ள அனுமதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்கொரியா, தாய்லாந்து போன்றவற்றைப் பின்பற்றுவதாக அமைப்பு தெரிவித்துள்ளது.
மனிதர்கள் சாப்பிடுவதற்காகப் பூச்சிகள் வளர்ப்பதை ஐக்கிய நாட்டின் உணவு, வேளாண்மை அமைப்பு ஊக்குவித்து வருகிறது.