அங் மோ கியோவில் மூன்று வாகனங்கள் சிக்கிய விபத்தில் வாகன ஓட்டுநர் ஒருவர் மாண்டார். ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 16) அன்று பிற்பகல் ஒரு மணியளவில் அங் மோ கியோ அவென்யு 5, அங் மோ கியோ தொழிற்பேட்டை 2 இடையே உள்ள சாலை சந்திப்பில் விபத்து ஏற்பட்டது.
68 வயதான வாகன ஓட்டுநர் நினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருடன் காரில் இருந்த பெண், 33, லாரி ஓட்டுநர், 55, ஆகிய இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டுச்செல்லப்பட்டனர்.
மூவரும் வெவ்வேரு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.