மெர்லயனுக்குப் புத்துயிர் ஊட்டிய ஓவியர்கள்

மெர்லயனுக்குப் புத்துயிர் ஊட்டிய ஓவியர்கள்

1 mins read
7e6e7dbf-ff25-4680-9eb0-c56f4d9aa88a
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரின் மிகப் பிரபல சின்னமான மெர்லயனுக்கு இவ்வாண்டு 50வது பிறந்தநாள். இதனையொட்டி மெர்லயனை வித்தியாசமான கோணத்தில் வரையும்படி ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்களுக்கு அண்மையில் சவால் விடுக்கப்பட்டது. 300க்கும் மேற்பட்ட வாசகர்கள் தங்கள் கைவண்ணத்தை அனுப்பிவைத்தனர்.

சிங்கப்பூரின் மற்ற சின்னங்களான சிங்கா எனும் கணிவன்பு சிங்கம், பொதுப் பயனீட்டுக் கழகத்தின் வாட்டர் வாலி போன்றவற்றுடன் மெர்லயன் இருப்பது போன்று ஓவியம் ஒன்று அனுப்பப்பட்டது. சிலர் 'ஷியோக்' போன்ற சிங்கிலிஷ் சொற்களைத் தங்கள் மெர்லயன் ஓவியத்தில் இணைத்துகொண்டனர். சாங்கி விமான நிலையம், மரினா பே சாண்ட்ஸ் போன்ற புகழ்பெற்ற இடங்களையும் மெர்லயன் ஓவியத்துடன் சேர்த்து வரைந்திருந்தனர் சிலர்.

சிறுவர்கள் முதல் மூத்தோர் வரை இதில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். 300 படைப்புகளிலிருந்து 50 தேர்ந்தெடுக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அன்பளிப்புப் பை ஒன்று வழங்கப்படும்.

ஓவியங்களை இந்த இணையப்பக்கத்தில் காணாலாம்: str.sg/50merlion

தொடர்புடைய செய்திகள்