பாசிர் ரிஸ் டிரைவ் 1ல் செயல்படும் ஒன்பது பேருந்துச் சேவைகள் குறுக்கு தீவு ரயில் பாதைக்காக அக்டோபர் 30லிருந்து தற்காலிகமாக மாற்றிவிடப்படும்.
ரயில் பாதை கட்டுமானப் பணிக்காக சாலை மூடப்படுவதால் 21, 39, 53, 81, 109 ஆகிய ஐந்து ஸ்பிஸ் பேருந்துச் சேவைகள் பாதிக்கப்படும்.
கோ- ஏஹெட் சிங்கப்பூர் நிறுவனத்தின் பேருந்து சேவைகளான 12,12e, 17, 518 ஆகியவையும் மாற்றிவிடப்படும்.
பாசிர் ரிஸ் டிரைவ் 1ல் அமைந்துள்ள இரண்டு பேருந்து நிருத்தும் இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்படமாட்டா. இவை பாசிர் ரிஸ் ஈஸ்ட் நிலையம் மற்றும் வைட் சண்ட்ஸ் தொடக்கப்பள்ளி. இதற்குப் பதிலாக பாசிர் ரிஸ் ஸ்ட்டிரிட் 11க்கும் ஸ்ட்டிரிட் 12க்கும் இடைப்பட்ட ஆறு பேருந்து நிருத்தும் இடங்களில் சேவைகள் நிறுத்தும்.
சாலை மூடப்படுவது குறித்த மேல் விவரங்களை நிலப் போக்குவரத்து ஆணையம் விரைவில் வெளியிடும்.
குறுக்கு தீவு ரயில் பாதையின் கட்டுமானப் பணியின் முதல் கட்டமாக 12 நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கட்டுமானப் பணி 2030க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

