சிங்கப்பூரில் ஒரு மிக அரிய டைனோசரின் எலும்புக்கூடு காட்சியில் வைக்கப்படவுள்ளது. டி-ரெக்ஸ் வகையைச் சேர்ந்த இந்த டைனோசர் கிட்டத்தட்ட 68 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் சுற்றித்திரிந்தது.
'ஷென்' என அழைக்கப்படும் இந்த எலும்புக்கூடு அக்டோபர் 28 முதல் 30ஆம் தேதி வரை விக்டோரியா அரங்கில் காட்சியில் இருக்கும். அடுத்த மாதம் ஹாங்காங்கில் அது ஏலத்தில் விடப்படும்.
2020ல் அமெரிக்காவின் மொண்டானா மாநிலத்தில் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் நீளம் 12.2 மீட்டர், உயரம் 4.6 மீட்டர்.
ஆசியாவில் டி-ரெக்ஸ் எலும்புக்கூடு ஏலத்தில் விடப்படுவது இதுவே முதன்முறை. இதன் மதிப்பு சுமார் 25 மில்லியன் டாலர். ஆசியாவில் உள்ள எந்தவொரு அரும்பொருளகங்களில் டி-ரெக்ஸ் எலும்புக்கூடு காட்சியில் இல்லை. இதனால் இது நிச்சயம் நல்ல விலைக்கு விற்கப்படும் என ஏல நிறுவனம் நம்புகிறது.
இணையத்தில், தொகைக்காட்சிகள் ஆகியவற்றில் டைனோசர்கள் பற்றி பார்ப்பதற்கும் அவற்றின் எலும்புக்கூடுகளை நேரில் பார்ப்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு.
எலும்புக்கூட்டை பார்க்க விரும்புபவர்கள் இந்த இணையத்தளத்தை நாடலாம்: http://www.christies.com/sgtrex

