ஆஸ்திரேலியாவில் பிரதமர்; கல்வியாளர்கள், தொழில்துறைத் தலைவர்களுடன் சந்திப்பு

ஆஸ்திரேலியாவில் பிரதமர்; கல்வியாளர்கள், தொழில்துறைத் தலைவர்களுடன் சந்திப்பு

2 mins read
85a17dff-83bd-4d8c-98d8-8066b91f2f51
-

பிர­த­மர் லீ சியன் லூங் நேற்று முன்­தி­னம் 16ஆம் தேதி தொடங்கி இன்று 18ஆம் தேதி­வரை மூன்று நாள் பய­ண­மாக ஆஸ்­தி­ரே­லியா சென்­றுள்­ளார்.

தமது பய­ணத்­தின் ஒரு பகு­தி­யாக நேற்று அவர் சிட்னி நக­ரில் கல்­வி­யா­ளர்­க­ளை­யும் தொழில்­துறைத் தலை­வர்­க­ளை­யும் சந்­தித்­துப் பேசி­னார்.

பின்­னர் கேன்­ப­ரா­வில் நடந்த ஏழா­வது சிங்­கப்­பூர்-ஆஸ்­தி­ரே­லியா தலை­வர்­கள் சந்­திப்பு நிகழ்ச்­சி­யில் ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஆன்­டனி அல்­ப­னிசு­டன் திரு லீ பங்­கேற்க இருக்­கி­றார்.

கொவிட்-19 தொற்று பர­வத் தொடங்­கிய பிறகு பிர­த­மர் லீ, ஆஸ்­தி­ரே­லி­யா­விற்கு மேற்­கொண்ட முதல் பய­ணம் இது­தான்.

வெளி­யு­றவு அமைச்­சர் விவியன் பால­கி­ருஷ்­ணன், வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் மற்­றும் அர­சாங்க உய­ர­தி­கா­ரி­களும் அவ­ரு­டன் சென்­றுள்­ளனர்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஃபூ மீ ஹாரும் சக்­தி­யாண்டி சுப்­பாட்­டும் ஆஸ்­தி­ரே­லியா சென்­றுள்ள சிங்­கப்­பூர் பேரா­ளர்­கள் குழு­வில் இடம்­பெற்­றுள்­ள­னர்.

சிட்­னி­யில் இடம்­பெற்ற நேற்­றைய சந்­திப்­பு­களில் திரு சுப்­பாட்­டும் இடம்­பெற்­றி­ருந்­தார்.

அது­பற்றி தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டுள்ள அவர், "ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் அல்­பனிசை­யும் அவ­ரின் குழு­வி­ன­ரை­யும் நாளை (இன்று) சந்­திக்க ஆவ­லாக இருக்­கி­றோம். ஆஸ்­தி­ரே­லி­யா­வு­டன் அர்த்தமுள்ள, நீண்­ட­கால உறவு­களை எதிர்­நோக்­கு­கி­றோம்," என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

"முக்­கிய உலக நிகழ்­வு­களில் சிங்­கப்­பூ­ரின் கண்­ணோட்­டம் குறித்து ஆஸ்­தி­ரே­லி­யர்­கள் மிகுந்த ஆர்­வ­மும் நன்­ம­திப்­பும் கொண்­டுள்­ள­னர்," என்று திரு­வாட்டி ஃபூ தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் தெரி­வித்­துள்­ளார்.

இரு­நா­டு­களும் பங்­கா­ளி­க­ளாக இணைந்து செயல்­பட பல வாய்ப்பு­கள் இருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"சிங்­கப்­பூர் - ஆஸ்­தி­ரே­லியா பசு­மைப் பொரு­ளி­யல் உடன்­பாட்­டின்­கீழ், பசு­மைப் பொரு­ளி­ய­லில் இணைந்து பணி­யாற்­று­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­க­ளால் நான் மிகுந்த ஆவ­லு­டன் இருக்­கி­றேன்," என்­றும் அவர் கூறி­யி­ருக்­கி­றார்.

வணி­கம், பொரு­ளி­யல், சுற்­றுச்­சூ­ழல் நோக்­கங்­க­ளு­டன் கூடிய இத்­த­கைய உடன்­ப­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­வது உல­கில் இதுவே முதன்­முறை எனச் சொல்­லப்­ப­டு­கிறது.

கேன்பராவிற்கு நேற்று வருகைதந்த பிரதமர் லீயையும் அவரின் துணைவியார் ஹோ சிங்கையும் ஆஸ்திரேலியாவிற்கான சிங்கப்பூர் துணைத் தூதர் ஹேரால்டு லீயும் (இடது) ஆஸ்திரேலியப் பிரதமருக்கான உதவி அமைச்சர் பேட்ரிக் கோர்மனும் வரவேற்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்