பணவீக்கம் 4.6% ஆகலாம் 11 ஆண்டுகள் காணாத அளவுக்குக் கூடும் என எதிர்பார்ப்பு உள்ளதாக ஆய்வு தகவல்

சிங்­கப்­பூ­ரின் ஒட்­டு­மொத்த பண­வீக்­கம் வரும் ஆண்டு 4.6% ஆக இருக்­குமென எதிர்­பார்க்­கப்­படுவ தாக செப்­டம்­பர் மாதம் நடத்­தப்­பட்ட ஆய்வு கூறுவதாக சிங்கப்பூர் பணவீக்க எதிர்பார்ப்பு ஆய்வு அட்ட வணையின் ஆகப்புதிய காலாண்டு அறிக்கை (SInDex) தெரிவிக்கிறது.

அதற்கு முன்­ன­தாக ஜூன் மாதம் நடத்­தப்­பட்ட ஆய்­வில் இந்த எதிர்­பார்ப்பு 3.9% ஆக இருந்­தது. பண­வீக்­கம் 4.6% உயர்ந்­தால் அது 11 ஆண்­டு­களில் இல்­லாத ஓர் அளவாக இருக்­கும்.

இதற்கு முன்­ன­தாக 2011 டிசம்­பரில்­தான் பண­வீக்­கம் 4.6% ஆக இருந்­தது. ஒப்­பிட்­டுப் பார்க்­கை­யில், கடந்த 2012 முதல் 2021 வரை 3வது காலாண்டு சரா­சரி பணவீக்கம் சுமார் 3.2% ஆக இருந்­தது.

இந்­தப் பண­வீக்­கம் 2023ல் சரா­சரி­யாக 3.5% ஆக இருக்­கும் என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய புள்ளி­வி­வ­ரங்­கள் மூலம் தெரி­கிறது.

ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் ஜன­வரி முதல் ஆகஸ்ட் வரைப்­பட்ட காலத்­திற்­கான அனைத்து பொருள்­கள், சேவை­க­ளுக்­கு­மான பண­வீக்­கம் 5.7% அதி­க­ரித்து இருக்­கிறது என்­பது ஆகப் புதிய புள்­ளி­வி­வ­ரங்­கள் மூலம் தெரி­­கிறது.

ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் ஆகஸ்ட் மாத பண­வீக்­கம் 7.5% ஆக உள்­ளது. டிபி­எஸ் வங்கி­யும் சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­க­மும் நேற்று அந்தக் காலாண்டு அறிக்­கையை வெளி­யிட்­டன.

சிங்­கப்­பூ­ரின் பல்­வேறு வகை குடும்­பங்­க­ளை­யும் பிர­தி­நி­திக்­கும் வகை­யில் 500 பேரை உள்­ள­டக்கி அந்த ஆய்வு நடத்­தப்­பட்­டது.

கொவிட்-19ன் தாக்­கத்­தைச் சமா­ளிக்க பல கொள்­கை­கள் இருந்­தா­லும் கூட உல­க­ள­வில் நிச்­ச­ய­மில்­லாத நிலை இருக்­கிறது. பொரு­ளி­யல்­ பிரச்­சி­னை­கள் உள்ளன.

இவற்­றின் தாக்­கம் சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் வளர்ச்­சி­யி­லும் பண­வீக்­கத்­தி­லும் இருக்­கும் என்று பய­னீட்­டா­ளர்­கள் நம்­பு­வ­தாக டிபி­எஸ் வங்­கி­யும் இந்­தப் பல்­க­லைக்­க­ழ­க­மும் கூட்­ட­றிக்­கை­யில் கூறின.

ரஷ்யா-உக்­ரேன் போர் கார­ண­மாக பொது­வான விலை­ அதி­கரிப்பு இருக்­குமென 29.7% பய­னீட்­டா­ளர்­கள் கரு­து­கி­றார்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!