லிம் சின் யி, 23, என்ற ஆடவர், பெண் ணைப் போல நடித்து பாலியல் சேவை வழங்குவதாகக் கூறி 2021 ஜூன் முதல் பல ஆடவர்களை ஏமாற்றினார்.
அவர் சமூக ஊடகத்தில் நிர்வாணக் காணொளிகளையும் வெளியிட்டு ஆடவர்களை வசியப்படுத்தினார். பணம் கைக்கு வந்ததும் தனக்கு பாலியல் நோய் இருக்கிறது போன்ற பல பொய்களைச் சொல்லி ஏமாற்றினார்.
நான்கு குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்ட லிம்முக்கு பிணை நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 9ஆம் தேதி லிம் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாவார்.

