குற்றத்தை ஒப்புக்கொண்டார்

குற்றத்தை ஒப்புக்கொண்டார்

1 mins read
e10c2f85-cc69-4a39-8caa-c00c4d118700
-

எட்டு வயதுச் சிறுமிக்கு கணக்குப் பாடம் நடத்து வதற்காக டியோ தியான் ஹோ, 57, என்ற பகுதி நேரப் பயிற்றுவிப்பாளர் அமர்த்தப்பட்டார்.

கேள்விகளுக்குத் தவறாக பதில் கூறியதற்காக அந்தச் சிறுமியைக் கடந்த மார்ச் மாதத்தில் பல முறை அவர் கையில் திருகினார், தட்டினார், கையில் அடித்தார். தலையைப் பிடித்து கீழே இழுத்தார்.

அதனால் அந்தச் சிறுமி வலி தாங்க முடியாமல் அழுதுவிட்டார்.

ஒரு குற்றச்சாட்டின் பேரில் டியோ குற்றத்தை நேற்று ஒப்புக்கொண்டார்.

தண்டனை விதிக்கப்படும்போது மற்றொரு குற்றச்சாட்டு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.