கொள்ளை அடித்ததாக இருவர் மீது குற்றச்சாட்டு

கொள்ளை அடித்ததாக இருவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
c8aca31f-7001-4781-b2e2-33dd3595d0f4
கொள்ளை அடிக்க பயன் படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி போன்ற தீமூட்டிக் கருவி. படம்: சிங்கப்பூர் காவல்துறை -

கைத்­துப்­பாக்கி வடி­வில் இருந்த தீமூட்­டிச் சாத­னம் ஒன்றை ஆயுத­மா­கக்கொண்டு, காத்­தோங் ஷாப்­பிங் சென்­ட­ரில் செயல்­படும் சிகை அலங்­கார நிலை­யம் ஒன்­றில் புகுந்து அங்கி­ருந்த ஒரு­வ­ரி­டம் $900 பணத்தை இரண்டு பேர் கொள்ளை அடித்து இருக்­கி­றார்­கள் என்று கூறப்­ப­டு­கிறது.

அந்த இரு­வ­ரில் ஒரு­வர் 14 வயது பதின்ம வயது இளை­ஞர். மற்­றொ­ரு­வர் ஹோ ஹீன் செங், 36, என்ற மலே­சி­யர். அந்த இருவரும் பின்­னர் பொருள்­களைத் திரு­டி­ய­தா­க­வும் கூறப்­படு­கிறது.

சம்­ப­வம் நிகழ்ந்து 24 மணி நேரத்­திற்­குள் இரு­வ­ரும் கைதா­யி­னர். கொள்ளை அடித்­த­தாக அவர்­கள் மீது நேற்று குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

கொள்­ளைச் சம்­ப­வம், எண் 865 மவுண்ட்­பேட்­டன் ரோடு முக­வ­ரி­யில் உள்ள காத்­தோங் ஷாப்­பிங் சென்ட­ரில் அக்­டோ­பர் 14ஆம் தேதி இரவு சுமார் 10 மணிக்கு நிகழ்ந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.