சிறுவன்மீது வெந்நீர் கொட்டி கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை

1 mins read
e593610c-99d1-4f50-a305-4f13867534dd
-

ஐந்து வயது சிறுவனின் உயிர் போகும் வரையிலும் பலமுறை அவன்மீது வெந்நீரைக் கொட்டி ஒரு இரும்புக் கூண்டுக்குள் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தினர். இந்தக் கொடூரச் செயலைப் புரிந்த பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அஸ்லின் அருஜுனாவும் அவரது கணவர் ரிட்சுவான் மெகா அப்துல் ரஹ்மானும் கடந்த 2016ஆம் ஆண்டு சிறுவன்மீது நான்கு முறை வெந்நீரைக் கொட்டி காயம் ஏற்படுத்தினர்.

இந்தக் குற்றத்திற்காக 2020ல் அவர்களுக்கு தலா 27 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, ரிட்சுவானுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அஸ்லின் கொலை செய்ததாக நிரூபிக்கப்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் 15க்கும் 22ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தம்பதியர் நான்கு முறை சிறுவன்மீது வெந்நீரை ஊற்றி காயம் ஏற்படுத்தி அவனை துடிதுடிக்கச் செய்துள்ளனர். கடைசியாக நடந்த சம்பவத்தின்போது மயங்கி விழுந்த சிறுவனை, ஏழு மணி நேரத்திற்குப் பிறகு அந்தத் தம்பதியர் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.

சிறுவனின் உடலில் முக்கால்வாசி பகுதி வெந்நீர் பட்டு வெந்து போயிருந்தன. அவனுக்கு ஏற்பட்டிருந்த கடுமையான காயங்களால் அவன் மாண்டான்.