தீபாவளி பொது விடுமுறையை முன்னிட்டு, இஸ்தானா அதிபர் மாளிகை வளாகம் அக்டோபர் 24 காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களுக்குத் திறந்து விடப்படும்.
பள்ளிகள் வழங்கும் இசை, நடன நிகழ்ச்சிகளை வருகையாளர்கள் கண்டும், கேட்டும் ரசிக்கலாம். இதோடு, அவர்கள் கலந்துகொள்ள பல நடவடிக்கைகளும் உள்ளன. மெழுகுவர்த்தி செய்வது, பலூனில் சிற்பங்கள் வடிவமைப்பது போன்ற நடவடிக்கைகளிலும் வருகையாளர்கள் பங்கெடுக்கலாம்.
உணவுக் கடைகள் மற்றும் பல பொருள்களை விற்கும் கடைகள் அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்ட நினைவுப் பொருள்களும் அதிபர் சவால் நினைவுப் பொருள்களும் விற்க்கப்படும். திரட்டப்படும் தொகை அதிபர் சவாலுக்கு வழங்கப்படும். இஸ்தானா வளாகத்துக்குள் செல்ல சிங்கப்பூரர்களுக்கும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கும் அனுமதி இலவசம். மற்றவர்கள் $2 கட்டணம் செலுத்த வேண்டும்

