விதிகளை எடுத்துகூறிய பாதுகாவல் அதிகாரி தாக்கப்பட்டார்

விதிகளை எடுத்துகூறிய பாதுகாவல் அதிகாரி தாக்கப்பட்டார்

1 mins read
499753b0-ef2a-492b-af71-1e6e776190fc
தாக்கப்பட்ட பாதுகாவல் அதிகாரி சுரேஷ் சுப்ரமணியம் (படம்: பாதுகாப்பு ஊழியர்கள் சங்கம்/பேஸ்புக்) -

விதிகளை மீறியதற்காகத் தன்னை கேள்வி கேட்ட பாதுகாவல் அதிகாரியைத் தாக்கியுள்ளார் லாரி ஓட்டுநர் ஒருவர்.

பயனியர் தளவாட மையத்தில் இந்த சம்பவம் சென்ற வியாழக்கிழமை காலையில் நடந்தாக பாதுகாவல் ஊழியர்கள் சங்கம் திங்கட்கிழமை (அக்டோபர் 17) தனது பேஸ் புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தது.

காலியான கொள்கலன் ஒன்றை எடுக்க கனரக வாகன ஓட்டுநர் மையத்துக்கு வந்திருந்தார். அவர் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்று அங்கு பணியில் இருந்த பாதுகாவல் அதிகாரி சுரேஷ் சுப்ரமணியம், 51, கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த ஓட்டுநர் அதிகாரியைப் பார்த்து கத்தியுள்ளார்.

அந்த வளாகத்திலிருந்து புறப்பட்ட ஓட்டுநர், லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு அதிகாரியிடம் மீண்டும் வம்பு இழுத்துள்ளார். அவரை தாக்கியும் உள்ளார். இதைக் கண்ட மற்ற பாதுகாவல் அதிகாரிகள் ஓட்டுநரை தடுத்துநிறுத்தினர்.

சம்பவம் குறித்து சுரேஷ் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இந்த ஆண்டு வெவ்வேறு சம்பவங்களில் இரு பாதுகாவல் அதிகாரிகள் தங்கள் பணிநேரத்தில் தாக்கப்பட்டனர்.