உறவுக்கார சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆடவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை.

உறவுக்கார சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆடவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை.

1 mins read
587d2252-c3ca-4718-b71c-8b8b9140bfa5
-

உறவுக்கார சிறுமியை ஏழு வயதிலிருந்து பாலியல் பலாத்காரம் செய்த ஆடவருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுமிக்கு சுமார் ஏழு வயது இருந்தபோது அவள் முதன்முதலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், 2015ல், அவளை மீண்டும் குற்றவாளி பலாத்காரம் செய்தார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், சென்றாண்டு பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் புகார் கொடுத்தார்.

தன்னை யாரும் நம்பமாட்டார்கள் என்று பயந்து புகார் கொடுக்க அந்தப் பெண் முதலில் தயங்கியுள்ளார். நண்பர்கள் அளித்த உதவியால் சென்ற ஆண்டில் மே மாதம் புகார் அளித்தார். சந்தேக நபர் அன்றே கைது செய்யப்பட்டார்.

சிறுவயதினருடன் பாலியல் உறவு வைத்திருந்த குற்றத்திற்காக 30 வயது ஆடவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண் குற்றவாளியுடன் ஒரே வீட்டில் வாழ்ந்ததால், அந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறுமியைப் பலமுறை குற்றவாளி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பெண் அவர்மீது வைத்திருந்த நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்தியதால், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்க வேண்டும் என்று அரசாங்கத் தரப்புத் துணை வழக்கறிஞர் மெலிசா ஹெங் வலியுறுத்தினார்.