கட்டட வாசலை வழிமறைத்த வெளிநாட்டு ஊழியர்கள்

கட்டட வாசலை வழிமறைத்த வெளிநாட்டு ஊழியர்கள்

1 mins read
52e9fbc3-e655-4cd8-853f-d68613a2ede3
-

அங் மோ கியோவில் உள்ள ஒரு கட்டட வாசலை வெளிநாட்டு ஊழியர்கள் இன்று வழிமறைத்து நின்றனர். தங்களுக்குச் சம்பளம் தரப்படாததால் அவர்கள் இவ்வாறு செய்தாகக் கூறப்பட்டது.

பேஸ்புக் பக்கம் ஒன்றில் பகிரப்பட்ட காணொளியில் ஒன்பது வெளிநாட்டு ஊழியர்கள் கட்டடம் ஒன்றுக்கு வெளியே வரிசையாக நின்றுகொண்டிருந்தனர். அவர்களில் ஐவர் கைகளில் காகித தாள்களைப் பிடித்திருந்தனர். அதில் 'கடனை அடைக்கவும்' என்றும் 'சம்பளத்தைக் கொடுக்கவும்' என்றும் சீன மொழியில் எழுதப்பட்டிருந்தது. தாள்களில் 'ஷாங்காய் சோங் கீ' என்ற கட்டுமான நிறுவனத்தின் பெயரும் இருந்தது.

மூன்று மாதம் வரை சம்பளப் பாக்கி இருப்பதாகப் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கூறினர். அவர்கள் வழிமறித்துக்கொண்டிருந்த கட்டடம் என்சிஎஸ் மையம் எனக் கூறப்பட்டது. ஊழியர்கள் லாரி ஒன்றை பயன்படுத்தி வாசலை மறித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து பிற்பகல் 1.50 மணிக்கு அழைப்பு வந்ததாக காவல்துறை குறிப்பிட்டது. சம்பவத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் 28 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். கலைந்து போகும்படி ஊழியர்களைக் கேட்டுகொண்டபோது அதற்கு அவர்கள் இணங்கியதாக காவல்துறையினர் கூறினர். யாரும் கைது செய்யப்படவில்லை. எனினும் ஊழியர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது.

மனிதவள அமைச்சு, ஷாங்காய்சோங் கீ நிறுவனம் ஆகியவற்றின் கருத்துகளை கேட்டறிய ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் அவற்றை தொடர்புகொண்டுள்ளது.