புதிய தடுப்பூசி: அதிக நாட்டம்; அதிக கூட்டம்; அதிக நேரம் காத்திருக்கும் நிலை

கொவிட்-19க்கு எதிரான புதிய இருவகை திறன்கொண்ட தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அதிக மானோர் ஆர்வமாக இருப்பதால் அதிக நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.

சில நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து ஊசியைப் போட்டுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

கொவிட்-19 தொற்று கூடுகிறது. மக்கள் ஆண்டு முடிவு பயணங்களுக்குத் திட்டமிடுகிறார்கள். இந்தச் சூழலில் இருவகை திறன் கொண்ட தடுப்பூசிக்குத் தேவை அதிகமாகியுள்ளது.

ஒன்பது ஒருங்கிணைந்த பரிசோதனை, தடுப்பூசி நிலையங்களில் புதிய தடுப்பூசி போடப்படுகிறது. நிலையங்களுக்குச் சென்று பார்த்தபோது, ஊசியைப் போட்டுக்கொள்ள ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம்வரைகூட மக்கள் காத்திருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

புதிய தடுப்பூசி போடத் தொடங்கியது முதலே அதைப் போட்டுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை கணிசமாகக் கூடி இருப்பதாக தடுப்பூசி நிலைய ஊழியர் ஒருவர் கூறினார். நண்பகல் வாக்கில் கிட்டத்தட்ட 500 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டதாக ஒரு நிலையத்தின் ஊழியர் தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை, புதிய தடுப்பூசிக்கு முன், நாள் ஒன்றுக்கு 100க்கும் அதிகமாகத்தான் இருந்தது. இருவகை திறன்கொண்ட தடுப்பூசி நிலையங்களில் முகக்கவசம் கட்டாயம்.

புதிய மொடர்னா இருவகை திறன் கொண்ட தடுப்பூசிக்கு சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் கடந்த செப்டம்பரில் அங்கீகாரம் வழங்கியது.

அந்தத் தடுப்பூசி மருந்து தொடக்கத்தில் தலைகாட்டிய கொரோனா கிருமியையும் உருமாறிய புதிய ஓமிக்ரான் கிருமியையும் எதிர்க்கும் ஆற்றலை உடலில் ஏற்படுத்துமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இப்போதைய கொவிட்-19 அலை அடுத்த மாத நடுப்பகுதியில் உச்சத்தை எட்டும் என்றும் அன்றாடம் சராசரியாக 15,000 பேர் வரை பாதிக்கப்படலாம் என்றும் சுகாதார அமைச்சு கூறியது.

புதிய தடுப்பூசிக்கு அதிக தேவை இருந்தால் தடுப்பூசி நிலையங்கள் இந்த வாரம் முதல் அன்றாடம் செயல்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங், சென்ற சனிக்கிழமை செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

மக்கள் https://www.gowhere.gov.sg/ என்ற முகவரியில் அருகே உள்ள தடுப்பூசி நிலையம் பற்றிய விவரங்களைப் பெறலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!