உற்பத்தித் துறையில் திறனாளர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதைத் தொடர்ந்து நிறுவனங்களுக்கு உதவ வழிகாட்டிப் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் வெளியிட்ட அப்புத்தகம், புதிய ஊழியர்களை ஈர்த்து தற்போது பணியில் இருப்போரைத் தக்கவைத்துக்கொள்ள குறிப்பாக சிறிய நிறுவனங்களுக்கு உதவும்.
"உற்பத்தி வேலைகளின் ஈர்ப்புத் தன்மை மேம்படுத்தப்படவேண்டும். தற்போது பணியில் இருப்போர் தொடர்ந்து தங்களை மேம்படுத்திக்கொள்ளவேண்டும், அவர்களை அடையாளம் கண்டு தொடர்ந்து பணியில் இருக்கச் செய்ய கூடுதல் முயற்சி எடுக்கவேண்டும்," என்று திரு ஹெங் சுட்டினார்.

