மது அருந்தி வாகனம் ஓட்டியவர்; சோதனையில் தெரியவில்லை

மது அருந்தி வாகனம் ஓட்டியவர்; சோதனையில் தெரியவில்லை

1 mins read
0c510ee8-1447-49b4-a22b-ef8b181b622a
-

கவ­ன­மின்றி நடந்­து­கொண்­ட­தால் பெண் காவல்­துறை அதி­காரி ஒரு­வ­ரின் மரணத்துக்குக் காரணமானவர் என்று சந்­தே­கிக்­கப்­படும் ஆட­வர் வாகன விபத்து நிகழ்­வதற்கு முன்பு இரு கோப்­பை­கள் அளவு மது அருந்­தி­யி­ருந்­தது தெரி­ய­வந்­துள்­ளது. எனி­னும், 'பிரெத்­லை­சர்' எனும் மது அருந்­தி­யதை அடை­யா­ளம் காண்­ப­தற்­கான சோத­னை­யில் அது தெரி­ய­வில்லை.

2019ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதம் 10ஆம் தேதி­யன்று 54 வயது அமெரிக்கரான ஆண்­ட்ரூ சார்ல்ஸ் வாஸ்கோ கவ­ன­மின்றி தனது 'ஏஸ்­டன் மார்ட்­டின்' வாக­னத்தை ஓட்­டி­ய­தா­கச் சொல்­லப்­படு­கிறது. அன்­றி­ரவு சுமார் 9.20 மணிக்கு அவ­ரின் வாக­னம், காவல்­துறை அதி­கா­ரி­யான 40 வயது ஸ்டாஃப் சார்­ஜண்ட் சலினா முகம்­மதை மோதி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மூன்று பிள்­ளை­க­ளுக்­குத் தாயான அவர் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யில் நான்கு நாள்­களுக்­குப் பிறகு மாண்­டார்.