செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
ee3f7635-39c7-463c-9767-7187ec90e0c1
-

லாரி ஓட்டுநரால் பாதுகாவலர் தாக்கப்பட்டதாக சந்தேகம்

விதிகளை மீறிய ஓட்டுநர் தன்னைக் கேள்வி கேட்ட பாதுகாவலரைத் தாக்கினார் என்று கூறப்பட்டது. சென்ற வாரம் வியாழக்கிழமை காலையில், பயனியர் தளவாட மையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகப் பாதுகாவல் ஊழியர் சங்கம் நேற்று முன்தினம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டது.

ஓட்டுநர் காலிப் பெட்டிகளை எடுக்க அங்கு வந்திருந்தபோது, 51 வயது பாதுகாவலர், திரு சுரேஷ் சுப்பிரமணியம் (படம்), பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதை ஓட்டுநரிடம் கூறினார் என்று சங்கம் தெரிவித்தது. ஆத்திரமடைந்த ஓட்டுநர், திரு சுரேஷைப் பார்த்து கத்தியதாக சங்கம் கூறியது.

மையத்திலிருந்து கிளம்பிய அந்த ஓட்டுநர், தனது வாகனத்தை சாலை ஓரம் நிறுத்திவிட்டு, திரு சுரேஷைத் தாக்கினார் என்று கூறப்பட்டது. இதர பாதுகாவலர்கள் ஓட்டுநரை நிறுத்த ஓடியதாகவும் ஓட்டுநர் அந்த இடத்தைவிட்டுக் கிளம்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது. திரு சுரேஷ்ஷும் அவர் வேலை செய்யும் ஸ்பியர் செக்குரிட்டி ஃபோர்ஸ் நிறுவனத்தின் முதலாளியும், காவல்துறையிடம் புகார் கொடுத்தனர் என்றும் பாதுகாவல் ஊழியர் சங்கம் கூறியது. மருத்துவர் அவருக்கு மூன்று நாள் மருத்துவ விடுப்பு கொடுத்ததாகவும் சங்கம் தெரிவித்தது.

அதிகாரிகளுடன் விசாரணையில் சங்கம் உதவுகிறது என்று சங்கத்தின் தலைவர் திரு ஆர்டி அமிர் கூறினார். பாதுகாவலர்கள் தங்களின் பணியைச் செய்யும்போது, அவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்று திரு ஆர்டி குறிப்பிட்டார்.

இந்த ஆண்டில், பாதுகாவலர்கள் இரண்டு சம்பவங்களில் தாக்கப்பட்டனர்.

சிறுமியிடம் பாலியல் ரீதியாக நடந்துகொண்டவருக்குச் சிறை

தனது வயது குறைந்த உறவினரை ஓர் ஆடவர் ஏழு வயதிலிருந்து மானபங்கம் செய்திருக்கிறார். அதற்கு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 2015ஆம் ஆண்டில் ஆடவர் அவர்களின் வீட்டில் சிறுமியிடம் பாலியல் ரீதியான செயலை மேற்கொண்டார்.

அதற்கு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2021ஆம் ஆண்டில் அந்தப் பெண் காவல்துறையிடம் புகார் கொடுத்தார். முதலில் யாரும் நம்பமாட்டார்கள் என்று பயந்து புகார் கொடுக்க தயங்கிய அந்த 22 வயது பெண், நண்பர்களின் உதவியுடன் 2021ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதியன்று புகார் கொடுத்தார்.

குற்றம் சுமத்தப்பட்ட 30 வயது ஆடவர் அன்றே கைது செய்யப்பட்டார். வயது குறைந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக நடந்துகொண்ட குற்றத்தை ஆடவர் ஒப்புக்கொண்டார். அவருக்கு நேற்று மூவாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை மறைக்க, குற்றம் சுமத்தப்பட்ட ஆடவரின் பெயரை வெளியிட அனுமதி இல்லை. சிறுமி தன்னுடன் ஒரே வீட்டில் இருந்ததைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஆடவர் அவரிடம் பாலியல் ரீதியாக நடந்துகொண்டார்.

முன்னாள் காதலியின் வருங்காலக்

கணவரை வீட்டில் அடைத்த ஆடவர்

முன்னாள் காதலியின் திருமண நாளன்று அவர் மணமுடிக்கவிருந்தவரை வீட்டில் பூட்டிவிட்டு வெளியே தீ வைத்த குற்றத்தை ஆடவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். 30 வயது சுரேந்திரன் சுகுமாரன் (படம்) தீயை மூட்டித் தவறான செயலில் ஈடுபட்டதாகத் தன்மீது சுமத்தப்பட்டிருந்த ஒரு குற்றச்சாட்டை நேற்று ஒப்புக்கொண்டார். தனது செயல் வீட்டிற்கு சேதம் விளைவிக்கும் என்பது தெரிந்தே அவ்வாறு செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

தனது முன்னாள் காதலி, திரு முகம்மது அஸ்லி முகம்மது சாலே என்பவரை மணமுடிக்கவிருந்ததை இன்ஸ்டகிராம் வாயிலாக கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதியன்று சுரேந்திரன் தெரிந்துகொண்டார். திருமணம் மறுநாள் நடைபெறவிருந்தது.

ெபாறாமையும் கோபமும்கொண்ட சுரேந்திரன், மறுநாள் அதிகாலை 3.35 மணியளவில் திரு அஸ்லியின் வீட்டுக்குச் சென்று அவரைப் பூட்டிவைத்து தீ வைத்தார்.