தந்தையைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இளையருக்கு மனநல சோதனை

தந்தையைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இளையருக்கு மனநல சோதனை

1 mins read
58a781e5-0303-4b6c-8818-79b6bb078780
படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தனது தந்தையைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 19 வயது இளையரிடம் மனநல சோதனை மேற்கொள்ள அவர் மூன்று வாரம் தடுத்துவைக்கப்படுவார்.

சைலஸ்­நர் சியா ஜியே காய் இன்று நீதிமன்றத்தில் காணொளி இணைப்­பின்­வழி தோன்­றினார். அவருடைய வழக்கு நவம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சியா, தனது தந்தையான 47 வயது எடி சியா வீ டெக்கை, ஈசூன் அவென்யூ 4ல் உள்ள புளோக் 653ன் 4வது மற்­றும் 5வது மாடி­க­ளுக்­கி­டையே கொலை செய்ததாக அவர்மீது குற்­றஞ்சாட்­டப்­பட்­டுள்ளது.