எதிர்வரும் தீபாவளி பொது விடுமுறையை முன்னிட்டு மலேசியா செல்லத் திட்டமிடுவோர், கடற்பாலத்தில் போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் கூறியுள்ளது.
சோதனைச்சாவடிகளில் குடிநுழைவு நடைமுறைக்குக் கூடுதல் நேரத்தைப் பயணிகள் கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் கீழ்க்காணும் உச்ச நேரங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது:
- சிங்கப்பூரிலிருந்து புறப்படுவது
-வெள்ளிக்கிழமை (அக்டோபர் 21):மாலை 3 மணி முதல் இரவு 11.59 மணி வரை -சனிக்கிழமை (அக்டோபர் 22): காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 11.59 மணி வரை
- சிங்கப்பூருக்கு வருவது
- திங்கட்கிழமை(அக்டோபர் 24): மாலை 6 மணி முதல் இரவு 11.59 மணி வரை
சிங்கப்பூரிலிருந்து கிளம்புவதற்கு முன் போக்குவரத்து நிலவரம் குறித்த அண்மை தகவல்கடிளப் பெற்றுகொள்ளுமாறு ஆணையம் அறிவுறுத்தியது.


