'மரண தண்டனை விதிக்க வேண்டும்'

'மரண தண்டனை விதிக்க வேண்டும்'

3 mins read
7700c3dd-9ae5-4015-be59-4c71e7ce65e1
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மரண தண்டனை உதவி இருப்பதாக ஆய்வில் பலர் கூறி உள்ளனர். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ் -

போதைப்பொருளை கடத்துவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று பத்தில் ஆறு சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளின் எண்ணமாக இருக்கிறது.

போதைப்பொருள் கடத்­த­லில் பொது­மக்­க­ளின் எண்­ணங்­களை அறிவதற்­காக உள்­துறை அமைச் சின்கீழ் கொள்கை ஆய்­வுக் கழகம் ஆய்வு நடத்­தி­யது.

இதில் பங்­கேற்­ற­வர்­களில் 61.5 விழுக்­காட்­டி­னர், அதா­வது பத்­தில் ஆறு பேர், வேண்­டு­மென்றே குறிப்­பி­டத்­தக்க அளவு போதைப் பொரு­ளைக் கடத்­திய குற்­ற­வா­ளி­க­ளுக்கு கட்­டாய மரண தண்­டனை விதிக்க வேண்­டும் என்­பதை ஒப்­புக் கொண்­ட­னர்.

2019ஆம் ஆண்டு அக்­டோ­பர் முதல் 2020ஆம் ஆண்டு ஜன­வரி வரை இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. பதி­னெட்டு வய­துக்கு மேற்­பட்ட 2,000 பேர் இதில் பங்­கேற்­ற­னர்.

ஆய்­வில் 64.1 விழுக்­காட்­டி­னர், சிங்­கப்­பூ­ருக்­குள் குறிப்­பி­டத்­தக்க அளவு போதைப்பொருளை வேண்டு­மென்றே கடத்திக் கொண்டு வருபவர்கள் மரண தண்­ட­னைக்கு தகு­தி­யா­னவர்­கள் என்று ஒப்­புக் கொண்­டுள்­ள­னர்.

போதைப்பொருளை கடத்­து­ ப­வர்­கள், சிங்­கப்­பூ­ரில் பலரை போதைப் பழக்­கத்­திற்கு அடி­மை­யாக்கி அவர்­க­ளது வாழ்க்­கையை நாச­மாக்­கு­வ­தே அதற்கு கார­ண மாக தெரிவிக்கப்பட்டது.

பல போதைப் புழங்­கி­க­ளின் குடும்­பத்­தை­யும் சீர­ழிப்­ப­தால் போதைப்பொருள் கடத்­திய குற்­ற­வா­ளி­கள் மரண தண்­ட­னைக்கு தகு­தி­யா­ன­வர்­கள் என ஆய்­வில் மொத்­தம் 62.1 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­த­னர்.

இதேபோன்ற மற்­றொரு ஆய்வை உள்­துறை அமைச்­சின் ஆய்வு மற்­றும் புள்­ளி­யி­யல் பிரிவு நடத்­தி­யது.

2021ஆம் ஆண்­டில் மேற்கொள்­ளப்­பட்ட இந்த ஆய்­வில், 65.6 விழுக்­காட்­டி­னர், குறிப்­பி­டத்­தக்க அளவு போதைப்பொரு­ளைக் கடத்­தி­ய­வ­ருக்கு மரண தண்­டனை கட்டா­ய­மாக்­க வேண்­டும் என்று கூறி­யி­ருந்­த­னர்.

பதி­னைந்து வய­துக்கு மேற்­பட்ட 2,000 பேர் ஆய்­வில் பங்­கேற்று தங்­க­ளது கருத்­து­க­ளைத் தெரி­வித் திருந்­த­னர்.

இதேபோன்ற எண்­ணத்­தைக் கொண்ட பாதிக்­கும் மேற்­பட்­டோர் (55%) போதைப்பொருள் கடத்­தல் மோச­மான குற்­றச்­செ­யல் என்­றும் சமூ­கத்­துக்கு ஆபத்­தா­னது என்­றும் கூறி­யி­ருந்­த­னர்.

ஆய்­வில் கலந்­து­கொண்டவர்­களில் 34.4 விழுக்­காட்­டி­னர் இந்த விவ­கா­ரத்­தில் நடு­நிலை வகிப்­ பதா­க­வும் கட்­டாய மரண தண்­ட­னையை ஏற்­க­வில்லை என்­றும் கூறி­னர்.

இவர்­க­ளி­டம் மேலும் ஆய்வு நடத்­தப்­பட்டு போதைப்பொருள் கடத்­த­லுக்கு என்ன தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம், ஆயுள் தண்ட னையா, மரண தண்­ட­னையா பொருத்­த­மான ஒன்றை தேர்ந் தெடுக்­கு­மாறு கேட்­டுக் கொள்­ளப் பட்­ட­னர்.

அப்­போது அவர்­களில் 22.6 விழுக்­காட்­டி­னர் மரண தண்­டனை விதிப்பதை நீதிமன்றத்திடம் விட்டுவிடலாம் என்றும் 61.6 விழுக்­காட்­டி­னர் ஆயுள் தண்­ட­னை­யை­யும் தேர்ந்­தெ­டுத்தனர். 15.8 விழுக்­காட்­டி­னர் தங்களுக்­குத் தெரி­ய­வில்லை என்று தெரி­வித்­த­னர்.

போதைப்பொருள் கடத்­த­லுக்கு மரண தண்­ட­னையை விதிக்கலாம் என்றவர்களில் பெரும்­பா­லா­ன­வர்­கள், அதா­வது 67 விழுக்­காடு பேர், மரண தண்­டனை விதிக்க வேண்டு மா என்­பதை அதி­கா­ரி­கள் முடிவு செய்­ய­லாம் என்று கூறி­னர்.

ஆயுள் தண்­டனை விதிக்க வேண்­டும் என்று கூறி­ய­வர்­கள், குற்­ற­வா­ளி­க­ளுக்கு மறு­வாழ்வு அல்­லது இயல்­பான வாழ்க்­கைக்கு திரும்­பு­வதை தங்­க­ளு­டைய வாய்ப் பாக தேர்ந்­தெ­டுத்­த­னர்.

ஆய்­வில் கொலைக் குற்­றம், மரண தண்­டனை விதிக்­கப்­பட வேண்­டிய கொடூ­ர­மான செயல் என்று பலரது பொது­வான கருத்தாக இருந்தது.

வேண்­டு­மென்றே கொலை செய்த குற்­ற­வா­ளி­க­ளுக்கு கட்­டாய மரண தண்­டனை பொருத்­த­மா­னது என்று கொள்கை ஆய்வு கழ­கத்­தில் பங்­கேற்­ற­வர்­களில் 71.4 விழுக் காட்­டி­ன­ரும் ஆய்வு மற்­றும் புள்ளி யியல் பிரிவு மேற்­கொண்ட ஆய்­வில் 80.5 விழுக்­காட்­டி­ன­ரும் தெரி­வித்தனர்.

சிங்­கப்­பூ­ரில் உள்­ள­வர்­களில் பத்­தில் ஏழு பேருக்கு மேல் வேண்டு ­மென்றே செய்­யப்­பட்ட கொலை, துப்­பாக்­கி­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது, போதைப்பொருள் கடத்­தல் போன்ற மோச­மான குற்­றச் செயல்­க­ளுக்கு மரண தண்­டனை பயன்­ப­டுத்­து­வதை ஆத­ரித்­துள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ருக்கு வெளியே பத்து வட்­டார மக்­களில் எட்­டுக்­கும் மேற்­பட்­டோர், இத்­த­கைய மோச­மான குற்­றச் செயல்­களை மரண தண்­டனை தடுப்­ப­தா­கவும் கூறி­யுள்­ள­னர்.

உள்­துறை அமைச்­சின் கீழ் மேற்­கொள்­ளப்­பட்ட மூன்று ஆய்­வு­கள் இந்த விவரங்களைத் தெரி­விக்­கின்­றன. ஆய்­வின் முடி­வு­கள் நேற்று அமைச்­சின் இணை­யப் பக்­கத்­தில் வெளி­யி­டப்­பட்­டது.