தீபாவளி விடுமுறை; நெரிசல் ஏற்படலாம்

தீபா­வளி வார இறுதி நீண்ட விடு­மு­றை­யில் உட்­லண்ட்ஸ் அல்­லது துவாஸ் சோத­னைச் சாவடி வழி­யாக மலே­சியா செல்ல விரும்­பும் பய­ணி­கள் கடு­மை­யான நெரி­சலை எதிர்­பார்க்­க­லாம்.

இதன் தொடர்­பில் குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி ஆணை­யம் நேற்று அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டது.

அதில் இரு சோத­னைச் சாவடி­ க­ளி­லும் உச்­ச­நேர போக்­கு­வ­ரத்து கொவிட்-19க்கு முந்தைய நிலையை எட்­டி­யி­ருக்­கிறது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னால் "பய­ணி­கள் தாம­தத்தை எதிர்­பார்க்க வேண்­டி­யி­ருக்­கும். அதற்கு ஏற்ப தங்­க­ளு­டைய பய­ணத் திட்­டங்­களை வகுத்­துக் கொள்ள வேண்­டும். போக்­கு­வ­ரத்து நெரி­ச­லில் சிக்­கிக் கொள்வதை தவிர்க்க வேண்­டும்," என்று ஆணை­யம் அறி­வு­றுத்­தி­யது.

"பய­ணி­கள் பொறுமை காத்து புரிந்­து­ணர்­வு­டன் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டும். போக்­கு­வ­ரத்து விதி­மு­றை­களை கடைப்­பி­டிக்க வேண்­டும்.

"சாலைத் தடங்­களை முறை­யாக பின்­பற்ற வேண்­டும். சோத­னைச் சாவடி ஆணை­யத்­தின் தடங்­க­ளைப் பயன்­ப­டுத்­தும்­போது அங்கு பணி­யில் உள்ள அதி­கா­ரி­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டும்," என்றும் அது கேட்­டுக் கொண்­டது.

2019ஆம் ஆண்டின் தீபாவளி வாரயிறுதி நீண்ட விடுமுறையின் போது உச்சநேரத்தில் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட, இங்கு வந்த பயணிகள் குடிநுழைவுச் சோதனை களை முடிப்பதற்கு குறைந்தது இரண்டு மணி நேரம் காத்திருந்தனர்.

இதனால் இம்மாதம் 24ஆம் தேதி தீபாவளி அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் தாமதத்துக்கு தயாராக இருக்க வேண்டும். உச்சநேரத்தில் சிங்கப் பூரில் இருந்து புறப்படுவதையும் தவிர்க்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 11.59 வரை, சனிக்கிழமை காலை 6.00 முதல் பத்து வரை, மாலை ஆறு முதல் இரவு 11.59 வரை உச்ச நேரமாகும்.

அக்டோபர் 24ஆம் தேதி சிங்கப்பூர் வருவதற்கான உச்ச நேரம் மாலை 6 முதல் இரவு 11.59 மணி வரை இருக்கலாம் என்று ஆணையம் அறிக்கையில் குறிப் பிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!