வாகனங்களில் கொண்டு செல்லப்படும் ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து புதுப்புது விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. வாகனங்களில் செல்லும் ஊழியர்கள் மழையில் நனையாமல் இருக்கும் வகையில் அவை மூடப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி முைறகளில் ஒன்று.
ஓட்டுநரும் வேலை செய்யும் ஊழியராக இருந்தால் மற்ற ஊழியர்களை தங்குமிடங்களுக்கு அனுப்புவதற்கு முன்பு அவருக்கு குறைந்தது அரை மணி நேரம் ஓய்வு வழங்கப்பட வேண்டும்.
வேகக் கட்டுப்பாடுகளை நிறுவ வேண்டும் என்ற கடந்த மார்ச் அறிவிப்பு மட்டும், அது குறித்து காவல்துறை ஆலோசனை நடப்பதால் நிறுத்தி வைக்கப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலப் போக்கு வரத்து ஆணையம் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த விதிமுறைகளை நேற்று அறிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம் போக்கு வரத்து மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர், நாடாளுமன்றத்தில் ஊழியர்களின் பாதுகாப்பு பற்றி பேசியிருந்தார். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அதிகாரிகளின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

