உயிர் மாய்ப்பு எண்ணத்தை மாற்றும் டாக்சி ஓட்டுநர்; பதக்கங்களைக் குவிக்கும் பூப்பந்தாட்ட ஜோடி

நெருங்­கிய நண்­பர் ஒரு­வர் 12 ஆண்­டு­க­ளுக்கு முன்பு உயிரை மாய்த்­துக் கொண்­ட­தால் பாதிக்­கப்­பட்ட தனி­யார் ஓட்­டு­ந­ரான கைரியா ஹனிம் மஸ்­லான், 44, தன்­னு­டைய காரில் பய­ணம் செய்­யும் பய­ணி­க­ளை­யும் உடல் ரீதி­யாக மட்­டு­மல்­லா­மல் மன­ரீ­தி­யா­க­வும் பாது­காப்­பாக அழைத்­துச் செல்­வதை தனது கட­மை­யாக கொண்டு உள்ளார்.

"விடு­மு­றைக்­குச் செல்­கி­றார்­களா அல்­லது இறு­திச் சடங்­குக்­குச் செல்­கி­றார்­களா என்­பது தெரி­யாது. நான் எப்­போ­தும் பய­ணி­கள் நல­மாக இருக்­கி­றார்­களா என்­பதை தெரிந்­து­கொண்டு அவர்­க­ளுக்­காக பிரார்த்­தனை செய்­வேன்," என்று திரு­வாட்டி கைரியா தெரி­வித்­தார்.

புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள வய­தான இரு பெற்­றோ­ருக்கு நேரத்தை ஒதுக்­கு­வ­தற்­காக 2018ல் அவர் 'கோஜெக்' ஓட்­டு­நர் ஆனார்.

பய­ணி­களில் யாருக்­கா­வது உயிரை மாய்த்­துக்கொள்­ளும் எண்­ணம் இருக்­கி­றதா என்­பதை அறி­யும் அவ­ரது முயற்­சிக்கு ­சில நேரங்களில் பலன் கிடைத்துள்ளது.

2021 செப்­டம்­ப­ரில் பயணி ஒரு­வர், அலு­வ­ல­கக் கட்­ட­டத்­தில் தற்­கொலை செய்­து­கொள்­ளப் போவ­தா­கக் கூறிய சம்­ப­வத்தை அவர் நினை­வு­கூர்ந்­தார்.

காரின் பின்னால் அமர்ந்திருந்த அந்­தப் பெண். பின் இருக்­கையை கிழித்­துக்கொண்டு ­இருந்ததை கைரியா கவ­னித்­தார்.

"பின்­னர் அவர் மனம் விட்­டுப் பேசி­னார். கொவிட்-19 காலத்­தில் வியாபார நெருக்கடியில் சிக்­கிக்­கொண்­ட­தாக அவர் கூறி­னார். அவ­ருக்கு அறி­வுரை வழங்­கிய பிறகு நாங்கள் காப்பி குடிக்­கச் சென்­றோம். அவரை பாது­காப்­பாக வீட்­டுக்கு அனுப்பி வைத்­தேன்," என்­றார் கைரியா.

திருவாட்டி கைரியாவின் இத்தகைய தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்கும் வகையில் இவ் வாண்டின் ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் சிங்கப்பூரர் விருதுக்கு அவர் பெயர் முன்மொழியப்பட்டு உள்ளது.

சாதாரண சிங்கப்பூரர் சமூகத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்து வோரை பாராட்டுவதற்காக யுபிஎஸ் முதலீட்டு வங்கி இவ்விருதை வழங்குகிறது.

பூப்பாந்தாட்ட ஜோடியான டெர்ரி ஹீயும் ஜெசிக்கா டானும் இதே விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாண்டு அக்டோபர் 2ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட இவர்கள், இரட்டையர் பூப்பாட்ட போட்டிகளில் தற்போது கொடிகட்டி பறக்கின்றனர்.

கடந்த 12 மாதங்களில் மட்டும் நான்கு பொது விருது போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளனர். அக்டோபர் 2021ல் செக் குடியரசு போட்டி முதல் ஜனவரியில் இந்திய பொது விருது, ஏப்ரலில் ஃபிரான்சில் நடைபெற்ற 'ஓர்லின்ஸ் மாஸ்டர்ஸ்' வரை இருவரும் பல பதக்கங்களை வென்றுள்ளனர்.

உச்சக்கட்டமாக ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் அற்புத மான வெற்றியை அவர்கள் சாதித்தனர்.

"அர்த்தமுள்ள விருதுக்கு எங்கள் பெயரை முன்மொழிந்துள்ளது பெருமையாகவும் கௌரவமாகவும் இருக்கிறது," என்று ஜெசிக்கா டான், 29 கூறினார்.

"எங்களுடைய பயணம் அவ்வளவு எளிதானதல்ல. பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்திருக் கிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.

2024ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் தகுதி பெறுவதே அவர்களுடைய முன்னுரிமையாக உள்ளது. எட்டாவது ஆண்டாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சிறந்த சிங்கப்பூரருக்கான விருது இவ் வாண்டு வழங்கப்படவிருக்கிறது.

கடந்த ஆண்டு சக்திபாலன் பாலதண்டாயுதம் இவ்விருதை பெற்றார்.

இளம் தம்பதியர் இணையம் வழி விடுத்த வேண்டுகோளை ஏற்று அவர்களது ஒரு வயது மகளுக்கு தனது கல்லீரலின் ஒரு பகுதியை அவர் தானமாக வழங்கி இருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!