இறுதிச்சடங்கு செலவுகளை ஏற்கும் கார் விற்பனையாளர்

இறுதிச்சடங்கு செலவுகளை ஏற்கும் கார் விற்பனையாளர்

2 mins read
f5b45474-da54-4db6-b335-2668b418fe9f
பழைய கார் விற்பனையாளர் ஆன்சன் இங். கோப்புப் படம் -

ஒன்­பது வய­தி­லேயே தந்­தையை இழந்த ஆன்­சன் இங்­, தனது மாமா, துய­ரத்­தில் உள்ள குடும்­பங்­ க­ளுக்கு இறு­திச்சடங்கு ஏற்­பா­டு­களில் உதவியதை நேரில் பார்த்து வளர்ந்தார். அந்த உன்­னதப் பழக்­கம், அப்­போது உயர்­நி­லைப் பள்ளி மாண­வ­ரான ஆன்­சன் இங்­கை­யும் தொற்­றிக் கொண்­டது.

தற்போது பழைய கார் விற்பனை யாளரான அவர், முன்­பின் அறிமுக மில்லாதவர்களுக்கும் இறு­திச் சடங்கு செல­வு­க­ளுக்கு உதவி வரு­கி­றார்.

"மற்­ற­வ­ருக்கு உத­வும் மனப் பான்மையைக் கொண்ட மாமா கிடைத்­தது என்னுடைய அதிர்ஷ்­ட மாகும். ஆத­ரவே இல்­லா­த­வர்­களை நினைத்­துப் பாருங்­கள். அவர்­களு டைய நிலை எனக்­குத் தெரி­யும். அத­னால் நானும் என்­னு­டைய மாமா­வைப்­போல உதவி வரு­கி­றேன்," என்று ஆன்­சன் இங் தெரி­வித்­தார்.

தற்­போது 55 வய­தா­கும் இங், 'ஹாவ் ரென் ஹாவ் ஷி' எனும் இயக்­கத்தை 2018 முதல் நடத்தி வரு­கி­றார். இதன் மூலம் மாதந்­தோ­றும் உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்கு மளிகைப் பொருட்­கள் விநி யோகிக்கப்படுகின்றன.

இந்­தத் திட்­டம் மாதந்­தோ­றும் சுமார் 1,000 பேருக்கு உணவு அளித்து வரு­கிறது. உண­வுப் பொட்­ட­லங்­க­ளைக் கட்­ட­வும் விநி­யோ­கிக்­க­வும் தொடக்­கப்­பள்­ளி­யைச் சேர்ந்த மாணவ தொண்­டூ­ழி­யர்­கள் உதவி செய்கின்றனர்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சிங்­கப்­பூ­ரர் விரு­துக்கு முன்­மொ­ழி­யப்­பட்­ட­வர்­களில் இவ­ரும் ஒரு­வர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக முதியோர் இல்லங்கள், விடுதிகளில் வசிப்பவர்களுக்காக மதிய உணவு சமைக்க உதவி செய்து வருகிறார்.

முதியவர்களின் இறுதிச்சடங்கு விருப்பங்களையும் அவர் கேட்டு அறிந்து வைத்துள்ளார்.

"நான் இறக்கும்போது என்னுடைய பணத்தை கொண்டு செல்ல முடியாது. மக்களின் மகிழ்ச்சிக்காக இந்தப் பணத்தை செலவழிக்கிறேன். அவர்களுடைய இறுதி விருப்பப்படி வழியனுப்பி வைக்கிறேன். பணம்தான் எல்லாமே என்பது கிடையாது," என்கிறார் ஆன்சன் இங்.