‘உலகப் பொருளியல் மந்தமாவது சாத்தியம்’

உல­கப் பொரு­ளி­யல் மந்­த­ம­டை­யக்­கூ­டும்; அதைக் கருத்­தில்­கொண்டு செயல்­ப­டு­வ­தாக உல­கின் ஆகப்பெரிய முத­லீட்டு நிறு­வ­னங்­க­ளில் ஒன்­றான சிங்­கப்­பூ­ரின் 'ஜிஐசி' தெரி­வித்­துள்­ளது. அதிகரித்துவரும் பண­வீக்­கம் மோச­மான பின்­வி­ளை­வு­களை ஏற்­படுத்­த­லாம். அதனால் உல­க­ள­வில் பொரு­ளி­யல் நிலைத்­தன்­மையை உறு­திப்­படுத்த மத்­திய வங்­கி­கள் பண­வீக்­கத்­தைக் கட்­டுக்­குள் கொண்­டு ­வ­ர­வேண்­டும் என்று 'ஜிஐசி' தலைமை நிர்­வாகி லிம் சாவ் கியட் கூறி­னார்.

ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­து­டன் நடை­பெற்ற நேர்­கா­ண­லில் அவர் அவ்­வாறு சொன்­னார்.

"இல்­லா­வி­டில் பொரு­ளி­யல்­களும் நிதிச் சந்­தை­களும் நீண்ட காலம் சவால்­களை எதிர்­நோக்­கக்­கூ­டும்," என்று திரு லிம் எச்­ச­ரித்­தார். ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்னி நக­ரில் 'ஜிஐசி'யின் அலு­வ­ல­கத்­தைத் திறந்­து­வைத்­த­போது அவர் பேசி­னார். உக்­ரேன் மீது ரஷ்யா படை­யெடுத்­தது, பண­வீக்­கத்­தால் உய­ரும் வாழ்க்­கைச் செல­வி­னம், வேக­மாக மெது­வ­டை­யும் சீனா­வின் பொரு­ளி­யல் ஆகிய கார­ணங்­களால் உல­கப் பொரு­ளி­யல் மந்­த­ம­டை­யக்­கூ­டும் என்ற அச்­சம் அதி­க­மாகி வரு­கிறது. அடுத்த ஆண்­டில் உல­கப் பொரு­ளி­யல் 2.7 விழுக்­காடு வள­ரும் என்று அனைத்­து­ல­கப் பண நிதி­யம் கணித்­தி­ருந்­தது. எனி­னும், உல­கப் பொரு­ளி­ய­லில் மூன்­றில் ஒரு பங்கை கொண்டுள்ள நாடு­க­ளின் பொரு­ளி­யல்­கள் இந்த ஆண்டு அல்­லது அடுத்த ஆண்டு சுருங்­கும் என்­றும் நிதி­யம் குறிப்­பிட்­டது. "பொரு­ளி­யல் மேலும் மெது­வடை­யும். எவ்­வ­ளவு மெது­வ­டை­யும், அந்நிலை எத்தனை காலம் தொடரும் போன்ற விவ­ரங்­கள் தெரி­ய­வில்லை," என்­றார் திரு லிம். எனி­னும், உல­க­ள­வில் மத்­திய வங்கி­கள் பண­வீக்­கத்­தைக் கட்டுப்­படுத்தி பண­வீக்க விகி­தத்தை ஒரு­வ­ழி­யா­கக் குறைக்­கும் என்று நம்­பிக்கை கொண்­டுள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

இதற்­கி­டையே, ஆஸ்­தி­ரே­லியா­வின் பொரு­ளி­யல் ஓர­ளவு மீள்­தி­ற­னு­டன் இருப்­ப­தால் அந்­நாட்­டின் மறு­ப­ய­னீட்டு எரி­சக்­தித் துறை, அத்துறையுடன் தொடர்பு உடைய மற்றவை ஆகி­ய­வற்­றில் இருக்­கும் வாய்ப்­பு­களை 'ஜிஐசி' ஆராய்­வதாகத் திரு லிம் தெரி­வித்­தார். 'ஜிஐசி' தற்­போ­தைக்கு ஆஸ்­தி­ரே­லியா சம்­பந்­தப்­பட்ட திட்­டங்­களை அதி­கம் கையா­ள­வில்லை. குறிப்­பாக சொத்­துச் சந்தை தொடர்­பான ஆஸ்­தி­ரேலியத் திட்­டங்­க­ளைத்­தான் 'ஜிஐசி' கையாள்­கிறது. இருந்­தா­லும், உல­க­ள­வில் எரி­சக்தி உரு­மாற்­றத்­தில் ஆஸ்­தி­ரேலியா பெரும்­பங்கு வகிக்­க­லாம் என்று திரு லிம் சுட்டிக்காட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!