வடக்கு-தெற்கு எம்ஆர்டி ரயில் பாதையில் நேற்று காலை உச்சவேளையின்போது சேவை தடைபட்டது. ஈசூன் எம்ஆர்டி நிலையத்தின் அருகே பராமரிப்புப் பணிகள் செய்வதற்குரிய பொறியியல் வாகனம் ஒன்றில் கோளாறு ஏற்பட்டு அங்கேயே மாட்டிக்கொண்டதால் ஜூரோங் ஈஸ்ட்டை நோக்கிச் செல்லும் இயோ சூ காங், கேன்பரா நிலையங்களுக்கு இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இரு நிலையங்களுக்கும் இடையே இரு திசைகளிலும் இலவசப் பேருந்துச் சேவைகள் இயங்கின. மூன்று மணிநேரத்திற்கு மேல் நீடித்த தடையை அடுத்து காலை 8.50 மணியளவில் ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது. ரயில் சேவை முடிந்த பிறகு கோளாறு ஏற்பட்ட பொறியியல் வாகனம் அகற்றப்படும்.
வடக்கு-தெற்கு எம்ஆர்டி பாதையில் ரயில் சேவைத் தடை
1 mins read
-

