மோட்டார்சைக்கிள் சிஓஇ கட்டணம் புதிய உச்சம்

மோட்டார்சைக்கிள் சிஓஇ கட்டணம் புதிய உச்சம்

2 mins read
9f518a98-b5d2-4eb6-ba92-17de3a00c445
-

மோட்­டார்­சைக்­கிள்­க­ளுக்­கான வாகன உரி­மைச் சான்­றி­தழ் (சிஓஇ) கட்­ட­ணங்­கள், மீண்­டும் புதிய உச்­சத்­தைத் தொட்­டுள்­ளன. ஆக அண்­மைய ஏலக் குத்­தகை நேற்று முடி­வ­டைந்­த­தில் அனைத்து வாக­னப் பிரி­வு­க­ளி­லும் சிஓஇ கட்­ட­ணங்­கள் அதி­க­ரித்­தி­ருந்­தன.

மோட்­டார்­சைக்­கிள்­க­ளுக்­கான சிஓஇ $12,801 எனப் பதி­வா­னது. ஆக மலி­வான விலை­யில் கிடைக்­கக்­கூ­டிய ஒரு மோட்­டார்­சைக்­கிளைக் காட்­டி­லும் மும்­ம­டங்­காக இந்த சிஓஇ கட்­ட­ணம் பதி­வாகி உள்­ளது.

1,600 சிசி வரை­யி­லான என்­ஜின் கொள்­ள­ள­வு­டைய கார்­கள், 110 கிலோ­வாட் வரை­யி­லான மின்­சக்­தி­யு­டைய முழு மின்­சார கார்­கள் ஆகி­யவை அடங்­கிய கார் பிரி­வின் சிஓஇ கட்­ட­ணம் $80,501 லிருந்து $81,089க்கு அதி­க­ரித்து உள்­ளது.

பெரிய, அதிக ஆற்­ற­லு­டைய கார்­கள் மற்­றும் மின்­சார வாக­னங்­க­ளுக்­கான சிஓஇ கட்­ட­ணம் $95,856 லிருந்து 14.8% அதி­கரித்து $110,000ல் முடி­வ­டைந்­தது.

முந்­தைய ஏலக் குத்­த­கை­யில் மோட்­டார்­சைக்­கிள் சிஓஇ கட்­டணம் $11,751 எனப் பதி­வா­னதை அடுத்து ஆக அண்­மைய ஏலக் குத்­த­கை­யில் 8.9% ஏற்­றம் கண்­டுள்­ளது.

வர்த்­தக வாக­னங்­க­ளுக்­கான சிஓஇ கட்­ட­ண­மும் $65,991 லிருந்து 6.4% அதி­க­ரித்து $70,201 எனப் பதி­வா­கி­யுள்­ளது.

மோட்­டார்­சைக்­கிள்­க­ளைத் தவிர மற்ற அனைத்து வகை வாக­னங்­க­ளை­யும் பதிவு செய்­வ­தற்­கான பொதுப் பிரிவு வாகன சிஓஇ கட்­ட­ண­மும் 2.9% அதி­க­ரித்து $108,003ஆகப் பதி­வா­னது.

கடந்த இரு ஏலக் குத்­த­கை­களில் பெரும்­பா­லான வாக­னப் பிரி­வு­களில் சிஓஇ கட்­ட­ணங்­கள் சரிந்து வந்­ததை அடுத்து நேற்­றைய ஏலக் குத்­த­கை­யில் அவை மீண்­டும் ஏற்­றம் கண்­டுள்­ளன.

சிஓஇ எண்­ணிக்கை 13.8% குறைக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக நடந்த ஆக இறுதி ஏலக் குத்­தகை இது.