74 வயது குற்றவாளி அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார்

74 வயது குற்றவாளி அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார்

1 mins read
4eed6f25-8424-495f-9762-e75a2a887598
-

அமெரிக்காவில் வங்கி மோசடி, கையாடல் தொடர்பாக குற்றம் நிரூபணமான ஜேக் சு, அந்நாட்டிலிருந்து தப்பியோடி

30 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்து தனது 74வது வயதில் சிங்கப்பூரில் பிடிபட்டார். 33 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து தண்டனையை நிறைவேற்ற வேண்டிய நாளன்று சு முன்னிலையாகவில்லை. அவர் தைவானுக்கு தப்பியோடி விட்டதாக கண்டறியப்பட்டது. இவ்வாண்டு ஜூலை 12ஆம் தேதியன்று சிங்கப்பூர் காவல் துறை அதிகாரிகளிடம் சு சிக்கினார். அமெரிக்காவிடம் இம்மாதம் ஒப்படைக்கப்பட்ட சு, தனது 33 மாதச் சிறைத் தண்டனையை உடனடியாக நிறைவேற்றத் தொடங்கியதாகக் கூறப்பட்டது.