தான் 18 வயதை இன்னும் அடையவில்லை என்று கூறியும் அலோய் கிரெகரி மார்ஷல், 47, சிறுமியுடன் பாலியல் செயலில் ஈடுபட்டதுடன் சிறுமியின் சேவைகளுக்காக $1,000 பணமும் தந்ததாகக் கூறப்பட்டது. நேற்று மார்ஷலுக்கு 12 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயரை வெளியிடக்கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மார்ஷல் கடந்தாண்டு முற்பாதியில் 'ஷுகர்புக்' என்ற இணையத்தளத்தில் ஒரு துணையைத் தேடியபோது சிறுமியின் கணக்கைப் பார்வையிட்டதாகவும் அதில் சிறுமியின் வயது 18 என்று குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தங்களுடன் நேரத்தைச் செலவிட விரும்பும் பெண்களுக்கு ஆண்கள் பணம் தரும் வகையில் இரு பாலாரையும் இணைக்கும் ஓர் இணையத்தளம் இது.
பின்னர், 'டெலிகிராம்' செயலிவழி இருவரும் உரையாடியபோது, சிறுமிக்கு 18 வயதா என மார்ஷல் கேட்க, அதற்கு அச்சிறுமி 'இந்த டிசம்பரில் எனக்கு 18 வயது' என்று பதிலளித்திருந்தார்.
பின், இருவரும் பாலியல் செயலில் ஈடுபடுவதற்காக சந்தித்துக்கொண்டனர். இரண்டு மணிநேரச் சந்திப்பை அடுத்து மார்ஷல் $1,000 கொடுத்ததாகக் கூறப்பட்டது.