மின்தடை: குடிநுழைவு பாதுகாப்பு மீறல் இல்லை

மின்தடை: குடிநுழைவு பாதுகாப்பு மீறல் இல்லை

2 mins read
afa3aee4-243e-4afd-a29f-cd54a626e968
-

குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­யம், எதிர்­கா­லத்­தில் பரா­மரிப்­புப் பணி­கள் நடக்­கும்­போது அதி­க­மான மின்­உற்­பத்­திச் சாத­னங்­களை (ஜென­ரேட்­டர்­கள்) ஆயத்­த­நி­லை­யில் வைத்­தி­ருக்­கும்.

சோத­னைச்­சா­வ­டி­களில் மின்­தடை ஏற்­படுவதைத் தவிர்க்­கும் வகை­யில் இந்த ஏற்­பாடு இடம்­பெ­றும் என்று உள்­துறை துணை அமைச்­சர் ஃபைசல் இப்­ரா­ஹிம் நாடா­ளு­மன்­றத்­தில் கூறினார்.

உட்­லண்ட்ஸ் சோத­னைச் சாவடி­யில் இந்த மாதத் தொடக்­கத்­தில் மின்சா­ரம் தடைப்­பட்ட சம்­ப­வம் நிகழ்ந்­த­தால் குடி­நுழைவுச் சேவை­கள் பல மணி­நே­ரம் தாமதம் அடைந்­தன.

அந்­தச் சம்­ப­வத்­திற்கு முன்­ன­தா­கவே உட்­லண்ட்ஸ், துவாஸ் சோத­னைச்­சா­வ­டி­களில் மின்­வசதி ஏற்­பா­டு­களை மேலும் மேம்­படுத்த இந்த ஆணை­யம் ஏற்­கெனவே திட்­ட­மிட்டு இருந்­தது.

இந்­தத் திட்­டத்­தின்­படி அவற்றில் அமைக்­கப்­படும் இரண்­டாம் நிலை மின்­சார உள்­கட்ட மைப்பு வச­தி­க­ளுக்கு உறு­துணை யாக அந்த மின் உற்­பத்­திச் சாத­னங்­கள் செயல்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வ­டி­யில் அக்­டோ­பர் 8ஆம் தேதி இரவு நேரத்­தில், கூட்­டம் குறை­வாக இருக்­கும் என்­ப­தால் 11.40 மணிக்கு மின் கட்­ட­மைப்பு வசதி­களில் ஆணையம் சரி­பார்ப்­புப் பணி­களை மேற்­கொண்­டது.

அப்­போது துணை மின் உற்­பத்­திச் சாத­னங்­கள் இயக்கி விடப்­பட்­டன. அவை மின்­சா­ரத்தை வழங்­கின. ஆனால் அன்று இரவு சுமார் 12.20 மணிக்குத் திடீ­ரென்று அந்­தத் துணைச் சாத­னம் காற்றுக் குழாய் கோளாறு காரணமாக நின்றுவிட்­டது. அத­னால் மின்­சா­ரம் தடைப்­பட்­டது. இதன் விளை வாக குடி­நு­ழை­வுச் சேவை­கள் பாதிக்­கப்­பட்­டன. அதி­காலை 4 மணிக்கு மீண்­டும் மின்­சா­ரம் திரும்­பி­யது.

குடி­நு­ழை­வுச் சேவை­கள் அதி­காலை சுமார் 5.15 மணிக்கு மீண்­டன என்று இணைப் பேரா­சி­ரி­யர் ஃபைசல் விளக்­கி­னார்.

மின்­தடை நேரத்­தில் யாரா­வது சிங்­கப்­பூ­ருக்­குள் சட்­ட­விரோதமாக நுழைந்­தது போன்ற பாது­காப்பு மீறல் சம்­பவங்­கள் எது­வும் நிக­ழ­வில்லை.

அதி­கா­ரி­கள் மிக முக்­கி­ய­மான வாயில்­களில் தொடர்ந்து பணி­யில் இருந்­தார்­கள். அவர்­க­ளி­டம் கைய­டக்க விளக்­கு­கள் இருந்­தன. மின்­தடை நேரத்­தில் பாது­காப்­புச் சுற்­றுக்­கா­வல்­களும் அதி­க­ரிக்­கப்­பட்­டன என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார்.