வீட்டு அடமானக் கடன்: வட்டி உயர்வால் மூன்றில் ஒருவர் பாதிப்பு

வீட்டு அடமானக் கடன்: வட்டி உயர்வால் மூன்றில் ஒருவர் பாதிப்பு

1 mins read
4ff4ce9b-73db-4134-8e88-c25ac85feecd
-
Google News Preferred Icon

நிதி நிறுவனங்களிடம் இருந்து அடமானக் கடன் பெற்றிருக்கும் வீட்டு உரிமையாளர்களில் மூன்றில் ஒருவர் வட்டி உயர்வு காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்தார்.

என்றாலும்கூட சிங்கப்பூர் குடும்பங்களின் கடன் சூழ்நிலை கைமீறிப்போகாத அளவுக்குத் தொடர்ந்து நல்ல நிலையில் இருந்து வருகிறது.

வராமல் போகக்கூடிய அடமானக் கடன்கள் விகிதம் 0.3% என ஆகக் குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது. இத்தகைய அடுக்குமாடி வீடுகளின் எண்ணிக்கை 30கூட இல்லை என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாகச் சபை உறுப்பினருமான திரு டான் தெரிவித்தார்.