சீனாவுக்கு அமெரிக்கா தடை: இங்கும் பாதிப்பு இருக்கும்

அமெ­ரிக்­கா­வின் அதிநவீன தொழில்­நுட்­பங்­கள் சீனா­வின் கைக்­குக் கிடைப்­ப­தைக் கட்­டுப்­படுத்த அமெ­ரிக்கா புதிய நிபந்­தனை­களை நடை­மு­றைப்­ப­டுத்தி உள்­ளது. இதன் விளை­வாக சிங்­கப்­பூ­ரின் கணி­னிச் சில்லு தொழில்­துறையும் பாதிக்­கப்­படும்.

என்­றா­லும், இந்­தப் பாதிப்பை ஈடு­செய்­யும் வகை­யில் நட­வ­டிக்­கை­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என்று வர்த்­தக, தொழில் துணை அமைச்­சர் ஆல்­வின் டான் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

சீனா­வுக்­கான அதி­ந­வீன கணி­னிச் சில்­லு­கள், தொடர்­புடைய சாத­னங்­களை விற்­பதற்குத் தடை விதிக்­கும் நோக்­கத்­தில் அக்­டோ­பர் 7ஆம் தேதி அமெ­ரிக்கா பல ஏற்­று­மதி கட்­டுப்­பாடு­களை அறி­வித்­தது.

சீனா­வின் பல்­வேறு கணி­னிச் சில்லு தயா­ரிப்பு நிறு­வ­னங்­களில் வேலை பார்க்க அமெ­ரிக்க குடி­மக்­க­ளுக்­கும் அமெ­ரிக்க நிரந்­த­ர­வா­சி­க­ளுக்­கும் தடை விதிக்­கப்­போ­வ­தா­க­வும் அமெ­ரிக்கா அறி­வித்­தது.

இது பற்றி தெம்­ப­னிஸ் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பினர் டெஸ்­மண்ட் சூ கேட்ட கேள்­விக்குப் பதி­ல­ளித்து பேசிய திரு டான், அமெ­ரிக்­கா­வின் அந்த நிபந்­த­னை­கள் சிங்­கப்­பூரை குறி­வைத்து இடம்­பெ­று­வது அல்ல என்­றா­லும்­கூட சிங்­கப்­பூ­ரில் கணினிச் சில்லு தொழில்­து­றை­யும் அவற்­றால் பாதிக்­கப்­படும் என்று தெரி­வித்­தார்.

இந்­தத் தொழில்­துறை மிக­வும் சிக்­க­லா­னது, உல­க­ம­ய­மா­னது என்­பதே இதற்­கான கார­ணம் என்று அவர் விளக்­கி­னார்.

அமெ­ரிக்­கத் தடை­யால் ஏற்­படக்­கூ­டிய பாதிப்பை ஈடு­செய்­யும் வகை­யில், இங்கு நிறு­வ­னங்­க­ளு­டன் அர­சாங்­கம் செயல்­பட்டு வரு­கிறது என்று அவர் தெரி­வித்­தார்.

அந்த நிறு­வ­னங்­கள் தொழில்­களைத் தொடர்ந்து இடை­யூறு இல்­லா­மல் நடத்­து­வ­தற்­குத் தோதான திட்­டங்­க­ளைப் பலப்­படுத்­து­வது தொடர்­பி­லும் தங்­களுக்­குப் பொருள்­கள் கிடைக்­கும் வழி­களை நிறு­வ­னங்­கள் பல­முனைப்­ப­டுத்­து­வது குறித்­தும் அர­சாங்­கம் செயல்­பட்டு வரு­வ­தாக அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!