15 மாதம் காத்திருப்பு: 220 பேருக்கு ரத்து

தனி­யார் வீட்டு உரி­மை­யா­ளர்­கள் தங்­கள் வீட்டை விற்­று­விட்டு வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக மறு விற்பனை வீட்டை வாங்க 15 மாத காலம் காத்­தி­ருக்க வேண்­டும் என்ற விதி அமலாகி உள்ளது.

அதற்கு எதி­ராக அவர்­களில் பல­ரும் மேல்­மு­றை­யீடு செய்­த­னர். அதில் ஏறத்­தாழ 220 பேர் வெற்றி பெற்று இருக்­கி­றார்­கள் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

இவர்­க­ளைப் பொறுத்­த­வரை அந்­தக் காத்­தி­ருக்­கும் காலத்தை கழ­கம் தள்­ளு­படி செய்­து­விட்­டது.

காத்­தி­ருப்பு கால நிபந்­தனை செப்­டம்­பர் 30ஆம் தேதி நடப்­புக்கு வந்­தது. அதற்கு முன்­ன­தா­கவே வீவக மறு­விற்­பனை வீட்டை வாங்கு ­வ­தற்­கான விருப்ப உரி­மையை அவர்­கள் பெற்­றி­ருந்­ததாக அமைச்­சர் விளக்­கி­னார்.

வீடு ஒன்றை வாங்­கு­வ­தற்­கான விருப்ப உரிமை என்­பது, வீட்டை விற்­ப­தற்­கான சட்­ட­பூர்­வ­மான உடன்­பா­டா­கும். கழ­கம் இன்­று­வரை ஏறத்­தாழ 650 மேல்­மு­றை­யீ­டு­க­ளைப் பெற்­றி­ருக்­கிறது.

மற்­ற­வர்­க­ளைப் பொறுத்­த­வரை, அவர்­கள் வீவக மறு­விற்­பனை வீடு ஒன்றை வாங்­கு­வ­தற்­கான விருப்ப உரி­மை­யைப் பெறா­த­வர்­கள். அல்­லது ஏற்­கெ­னவே விற்­ப­தற்குக் கடப்­பாடு கொண்­டி­ருப்­ப­வர்­கள். அல்­லது அண்­மை­யில் தங்­கள் சொந்த வீட்டை விற்­றி­ருப்­ப­வர்­கள்.

அந்த 430 மேல்­மு­றை­யீ­டு­களும் ஒன்­றன் பின் ஒன்­றாக அத­ன­தன் அடிப்­ப­டை­யில் மதிப்­பி­டப்­படும் என்று அமைச்­சர் விளக்­கி­னார்.

மறு­விற்­பனை வீட்­டுச் சந்தை வேகத்தை மட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக ஆகக் கடை­சி­யாக செப்­டம்­பர் 30ஆம் தேதி 15 மாத காத்திருப்பு நிபந்­தனை நடப்­புக்கு வந்­தது.

இப்­போ­தைய தனி­யார் வீட்டை விற்­ற­தற்­குப் பிறகு 15 மாதம் கழித்து­தான் வீவக மறு­விற்­பனை வீட்டை, வீட்டு மானி­யம் இல்­லா­மல் அவர்­கள் வாங்க முடி­யும்.

கடந்த மூன்­றாண்­டு­களில் கைமா­றிய வீவக மறு­விற்­பனை வீடு­களில் 10ல் ஒரு வீட்டை தனி­யார் சொத்து உரி­மை­யா­ளர் வாங்­கி­னார். அவர் தன்­னு­டைய தனியார் வீட்டை விற்­று­விட்டு வீவக மறு­விற்­பனை வீட்­டுக்கு மாறி­னார்.

இப்­படி தனி­யார் வீட்டை விற்று­விட்டு வீவக வீட்டை வாங்­கு­வோ­ரி­டம் பொது­வாக அதி­கப் பண வசதி இருக்­கும்.

முதன்­மு­த­லாக வீவக வீட்டை வாங்­கு­வோர் அல்­லது வீவக சிறிய வீட்­டி­லி­ருந்து பெரிய வீட்­டிற்கு மாறு­வோர் ஆகி­யோ­ரு­டன் ஒப்­பிடும்­போது இவர்­கள் அதி­கம் பணம் கொடுத்து மறு­விற்­பனை வீட்டை வாங்க தயா­ராக இருப்­பார்­கள்.

வீவக புள்­ளி­வி­வ­ரங்­க­ளைப் பார்க்­கும்­போது சென்ற ஆண்­டில் ஏறத்­தாழ 31,000 மறு­விற்­பனை வீடு­கள் கைமா­றின.

இந்த எண்­ணிக்கை 2020ல் சுமார் 24,700 ஆக­வும் 2019ல் ஏறக்­கு­றைய 23,700 ஆக­வும் இருந்­தது.

தனி­யார் வீட்டை விற்­று­விட்டு வீவக வீட்­டுக்கு மாறு­வோ­ரில் சிலர் 55 அல்லது அதற்­கும் அதிக வய­துள்ளவர்கள்.

இவர்­கள் தங்கள் ஓய்வுகால திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக சிறிய வீவக மறு­விற்­பனை வீட்­டுக்கு மாறிக்­கொள்ள விரும்­பு­வர்.

நான்கறை அல்­லது அதற்­கும் சிறிய மறு­விற்­பனை வீட்டை வாங்­கி­னால் 15 மாத காலம் இவர்­கள் காத்­தி­ருக்க வேண்­டாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!