பாலர் பள்ளிகள்: பாதுகாப்பு நடைமுறைகள் கட்டாயம்

பாலர் பள்­ளி­கள் அனைத்­தும், அனு­மதியின்றி யாரும் உள்ளே வர­வில்லை என்­பதை உறு­திப்­படுத்­தும் வகை­யில் தங்கள் கட்­ட­டங்­க­ளைப் பாதுகாப்புடன் வைத்­திருக்­க­வேண்­டும் என்று சமு­தாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்­சர் சுன் ஷுவெ­லிங் நேற்று நாடாளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

பெரும்­பா­லான பாலர் பள்­ளி­கள் தங்கள் நுழைவாயி­லில் மின்­னணு தொழில்­நுட்­பப் பூட்டு களைப் பயன்­ப­டுத்­து­கின்­றன.

பரி­சோ­திக்­கப்­பட்ட பிறகே யாரும் உள்ளே அனு­ம­திக்­கப்­படு­கி­றார்­கள் என்று தெரி­வித்த அவர், பாலர் பள்ளி ஒவ்­வொன்­றும் யாரெல்லாம் வரு­கி­றார்­கள், யாரெல்லாம் போகி­றார்­கள் என்­ப­தைப் பரி­சோ­தித்து பதி­யக்கூடிய நடை­மு­றை­க­ளைக் கொண்­டி­ருக்க வேண்டும் என்­றும் கூறி­னார்.

தாய்­லாந்­தில் பாலர் பள்ளி ஒன்­றில் நிகழ்ந்த துப்­பாக்­கிச் சூட்டு சம்­ப­வத்தை அடுத்து, சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் பாலர் பள்ளி­க­ளி­லும் சிறார் பரா­ம­ரிப்பு நிலை­யங்களி­லும் இடம்­பெ­றும் பாது­காப்பு நடைமுறை­கள், பயிற்சி, ஆத­ரவு செயல்­திட்­டங்­கள் பற்றி செங்­காங், அல்­ஜு­னிட் குழுத் தொகுதிகளைச் சேர்ந்த உறுப்­பினர்­கள் கேள்வி கேட்­ட­னர்.

அதற்­குப் பதில் அளித்த அமைச்­சர், அனைத்து பாலர் பள்ளி­களும் பாது­காப்பு தொடர்­பான சம்­பவங்­க­ளைக் கையாள செயல்­மு­றை­களில் தரப்­ப­டுத்­தப்­பட்ட நடை­மு­றை­களைத் தோற்று­விக்க வேண்­டிய தேவை இருக்­கிறது என்­றார்.

எவ்­வ­ள­வுதான் முன்­னெச்­சரிக்­கை­கள் மேற்­கொள்­ளப்பட்­டா­லும்கூட, பாலர் பள்ளிகளும் பெற்றோரும் பரந்த அளவில் சமூகமும் எப்போதும் விழிப்பு நிலையில் இருந்து வர வேண்டும். அத்தகைய சம்பவம் நிகழ்ந்தால் அதைக் கையாள ஆயத்தமாகவும் இருக்கவேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

சமூ­கம் பாது­காப்­பாக இருக்­கிறது என்­பதை தொடர்ந்து உறு­திப்­ப­டுத்­து­வது அடிப்­படை ரீதி­யில் முக்­கி­ய­மாக ஒன்று என்­று அமைச்சர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!