மருத்துவக் கருவிகளுக்கு இணைய பாதுகாப்புக் குறியீட்டுத் திட்டம்

மருத்துவக் கருவிகளுக்கு இணைய பாதுகாப்புக் குறியீட்டுத் திட்டம்

2 mins read
16c32aa2-166c-482a-a21e-f3eba6abe3ff
-

மருத்­துவக் கரு­வி­கள் எந்த அள­வுக்கு இணையப் பாது­காப்­புக்கு எதி­ராக செயல்­ப­டு­கின்­றன என்­பதை சுகா­தார பரா­ம­ரிப்பு சேவை வழங்­கு­வோ­ரும் வாடிக்­கை­யா­ளர்­களும் அறிந்­து­கொள்ள புதிய தேசிய அடை­யா­ளக் குறி­யீட்­டுத் திட்­டம் வழி­வ­குக்­கும்.

மருத்­து­வக் கரு­வி­க­ளுக்­கான இணையப் பாது­காப்பு அடை­யா­ளக் குறி­யீட்டுத் திட்­டம் இனி 'பேஸ்­மேக்­கர்', 'வெண்­டி­லேட்­டர்' உள்­ளிட்ட கரு­வி­க­ளின் பாது­காப்பை கணித்து ஒன்று முதல் நான்கு வரை­யி­லான நிலை­களில் குறீ­யிட்டை வழங்­கும். நான்கு என்­பது ஆகச் சிறந்த குறி­யீடு ஆகும்.

முக்­கிய தர­வு­களைக் கையா­ளும் அல்­லது மற்ற கரு­வி­களில், கட்­ட­மைப்­பு­களில், சேவை­களில் இணைக்­கக்­கூ­டிய கரு­வி­க­ளுக்கு இந்­த­ப் பு­திய குறி­யீட்டு முறை பொருந்­தும். இவ்­வாண்­டின் சிங்­கப்­பூர் அனைத்­து­லக இணைய பாது­காப்பு வாரத்­தில் நேற்று பேசிய தொடர்பு தக­வல் மூத்த துணை அமைச்­சர் டாக்­டர் ஜனில் புதுச்­சேரி இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

இந்­தப் புதிய திட்­டம் சுகா­தார அமைச்சு, சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம், சிங்­கப்­பூர் இணையப் பாது­காப்பு முகவை, ஒன்­றி­ணைந்த சுகா­தார தக­வல் கட்­ட­மைப்­பு­கள் போன்­ற­வற்­றின் கூட்டு முயற்சி என்று புதன்­கி­ழமை அன்று மூத்த அமைச்­சர் டியோ சீ ஹிய குறிப்­பிட்­டி­ருந்­தார்.

வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­கள் திறன் கரு­வி­கள் எந்த அள­வுக்கு இணையப் பாது­காப்பு அம்­சங்­க­ளு­டன் இருக்­கின்­றன என்­பதை அவர்­கள் அறிந்­து­கொள்ள உதவி புரி­யும் முயற்­சி­க­ளின் ஓர் அங்­கம்­தான் இந்த புதிய மருத்­து­வக் கரு­வி­க­ளுக்­கான இணையப் பாது­காப்பு அடை­யா­ளக் குறி­யீட்டு திட்­டம். கடந்த 2018ஆம் ஆண்டு சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கட்­ட­மைப்­பு­கள் சிங்­கப்­பூ­ரின் ஆக அதி­க­மாக இணைய ஊடு­ரு­வல்­க­ளுக்கு இலக்­காக இருந்­தன.

அப்­போது சிங்­ஹெல்த், ஒன்­றி­ணைந்த சுகா­தார தக­வல் கட்­ட­மைப்­பு­கள் போன்­ற­வற்­றி­லி­ருந்து பிர­த­மர் லீ சியன் லூங் உள்­பட 1.5 மில்­லி­யன் நோயா­ளி­க­ளின் தனிப்­பட்ட தக­வல்­கள் இணைய ஊடு­ரு­வ­லுக்கு உள்­ளா­கின.

அந்த இரு அமைப்­பு­க­ளுக்­கும் பின்­னர் தனி­ந­பர் தரவு பாது­காப்பு ஆணை­யம் மொத்­த­மாக $1 மில்­லி­யன் அப­ரா­தம் விதித்­தது.

சிங்­கப்­பூர் கடந்த 2020ஆம் ஆண்டு இணையப் பாது­காப்பு அடை­யாள குறி­யீட்­டுத் திட்­டத்தை அறி­மு­கம் செய்­தது.

இதுவரை 300 விண்­ணப்­பங்­கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அவற்­றில் 200 பொருள்­க­ளுக்கு சான்­றி­தழ் வழங்­கப்­பட்­டுள்­ளன.

திட்­டம் குறித்த மேல் விவ­ரங்­கள் பின்­னர் அறி­விக்­கப்­பட்­டும்.

இணைய திறன் சேவை­கள் கொண்ட கரு­வி­கள் உல­க­ள­வில் பெருகி வரு­கின்­ற­ன என்­றும் 2030ஆம் ஆண்­டுக்­குள் அத்­த­கைய 50 பில்­லி­யன் கரு­வி­கள் பயன்­பாட்­டில் இருக்­கும் என்­றும் அமைச்­சர் ஜனில் கூறி­னார்.