5 வயதுக்குக் குறைவான 4,500 சிறார்கள் கொவிட் தடுப்பூசிக்குப் பதிவு

5 வயதுக்குக் குறைவான 4,500 சிறார்கள் கொவிட் தடுப்பூசிக்குப் பதிவு

1 mins read
c5469279-eba2-4e54-8b69-6a0efe593a7a
-

ஆறு மாதங்கள் முதல் நான்கு வயதுக்கு உள்பட்ட 4,500க்கும் மேலான சிறார்கள் தங்கள் முதல் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்பதிவுசெய்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று முன்பதிவுகள் தொடங்கின.

ஆறு மாதங்கள் முதல் நான்கு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு இரு மொடெர்னா ஸ்பைக்வேக்ஸ் தடுப்பூசிகளைப் போடுமாறு சுகாதார அமைச்சு பெற்றோருக்கு அறிவுறுத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் 25 மைக்ரோகிராம் அளவு தடுப்பூசி குழந்தைகளுக்குப் போடப்படும். இரு தடுப்பூசிகளுக்கும் இடையே குறைந்தது எட்டு வாரங்கள் இடைவெளி இருக்கவேண்டும்.

ஐந்து வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசிகள் தீவின் ஐந்து இடங்களில் வரும் 25ஆம் தேதி முதல் போடப்படும்.