தரையில் கிடந்த கடன் அட்டை மூலம் $6,000 தங்க மோதிரம் வாங்கிய மனிதவள அமைச்சு அதிகாரி; 8 மாதங்கள் சிறை

தரையில் கிடந்த கடன் அட்டை மூலம் $6,000 தங்க மோதிரம் வாங்கிய மனிதவள அமைச்சு அதிகாரி; 8 மாதங்கள் சிறை

2 mins read
5dc3e13c-f2f8-436c-b8c9-3c19aebc6169
-

மனி­த­வள அமைச்சு அதி­காரி ஒரு­வர் தரை­யில் ஒரு கடன் அட்­டை­யைக் கண்­டெ­டுத்­துள்­ளார். உடனே வேலை­யி­லி­ருந்து அரை நாள் விடுப்பு எடுத்­துக்­கொண்ட அவர் அந்த கடன் அட்­டை­யைக் கொண்டு $6,000 மதிப்­புள்ள தங்க மோதி­ரம் ஒன்றை வாங்­கி­யுள்­ளார்.

மேலும் அவர் அந்த கடன் அட்­டை மூலம் தமது ஈஸி-லிங்க் அட்­டை­யில் $20 பண­மும் நிரப்­பி­யுள்­ளார். மோசடி செயல்­க­ளைச் செய்­த­தாகத் தன் மீது சுமத்­தப்­பட்ட இரு குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்ட 36 வயது சியா குவோ ரொங் எனும் ஆட­வ­ருக்கு எட்டு மாதங்­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. மனி­த­வள அமைச்­சில் சியா பணி­பு­ரி­ந்த­போது அவர் மாதம் $5,000 சம்­ப­ளம் பெற்­றார் என்று நீதி­மன்­றத்­தில் குறிப்­பி­டப்­பட்­டது.

இவ்­வாண்டு மார்ச் 16ஆம் தேதி ஹவ்­காங் வட்­டா­ரத்­தில் அந்த கடன் அட்­டையை சியா கண்­டெ­டுத்­துள்­ளார். அதன் பின்­னர் தமக்கு மதி­யம் அரை நாள் அவ­சர விடுப்பு வேண்­டும் என்று தமது மேல­தி­கா­ரி­யி­டம் தக­வல் அனுப்­பி­யுள்­ளார்.

பிற்­ப­கல் 12.41 மணி­ய­ள­வில் ஹவ்­காங் எம்­ஆர்டி நிலை­யத்­திற்­குச் சென்ற அவர் தமது

ஈஸி-லிங்க் அட்­டை­யில் அந்த கடன் அட்டை கொண்டு $20 பணம் நிரப்பி ரயில் மூலம் சைனா­ட­வுன் எம்­ஆர்டி நிலை­யத்­திற்கு சியா சென்­றார். அங்கே பீப்பள்ஸ் பார்க் காம்­பி­ளக்ஸ் கடைத்­தொ­கு­தி­யில் கைக்­ க­டி­கா­ரங்­களும் நகை­களும் விற்­கும் கடை ஒன்­றில் தமக்கு உயர் தரத்­தில் ஒரு தங்க மோதி­ரம் வேண்­டும் என கோரி­யுள்­ளார்.

அங்கு அவர் $6,330 மதிப்­புள்ள தங்க மோதி­ரம் ஒன்றை அவர் கண்­டெ­டுத்த கடன் அட்டை மூலம் வாங்­கி­னார். பரி­வர்த்­தனை ரசீ­தில் அவர் போலி­யான கை யொப்பத்தையும் இட்­டார். அதே கடை­யில் மற்­று­மொரு தங்க வளை­யலை சியா அதே கடன் அட்டை மூலம் வாங்க முயன்­ற­போது பரி­வர்த்­தனை நிரா­க­ரிக்­கப்­பட்­டது. உடனே அங்­கி­ருந்து சென்ற சியா, கடன் அட்­டை­யை­யை­யும் தங்க மோதி­ரத்­துக்­கான ரசீ­தை­யும் வீசி­விட்­டார். பிறகு ஹவ்­காங் எம்­ஆர்டி அருகே உள்ள அட­குக்­க­டை­யில் அவர் வாங்­கிய தங்க மோதி­ரத்தை $4,550க்கு விற்­று­விட்­டார். மோதி­ரம் விற்றதற்கான ரசீதை வீசி­விட்டு பணத்தை தமது வங்­கிக் கணக்­கில் போட்­டுக்­கொண்­டார் சியா. அந்த பணத்­தைக் கொண்டு மளி­கைப் பொருள்­கள் வாங்­கு­வது, கட்­ட­ணங்­க­ளைக் கட்­டு­வது, டோட்டோ லாட்டரிச் சீட்டுகள் வாங்­கு­வது போன்ற செயல்­களில் சியா ஈடு­பட்டு வந்­துள்­ளார்.

சியா சில ஆண்­டு­க­ளா­கவே நிதி நெருக்­க­டி­யில் இருந்­த­தால் 'ஆசைக்கு மயங்கிவிட்டார்' என்று தற்­காப்பு தரப்பு கூறி­யது. அன்­றாட செல­வு­களை ஈடு­கட்ட 'ஏதா­வது அதி­ச­யம் நடக்­காதா' என்­று­தான் அவர் டோட்டோ லாட்டரிச் சீட்டுகளையும் வாங்­கி­னார் என்று அது குறிப்­பிட்­டது.