பன்முகத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய சமூகம் சிங்கப்பூரின் எதிர்காலத்துக்குப் பங்களிக்கும்: துணைப் பிரதமர்

பன்முகத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய சமூகம் சிங்கப்பூரின் எதிர்காலத்துக்குப் பங்களிக்கும்: துணைப் பிரதமர்

1 mins read
42f6ed38-1dc6-4143-82f8-27d7ca8d5079
-

பன்முகத்தன்மையும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகமும் அனைவராலும் போற்றப்படும் கொள்கைகள் என்றும் அவை சிங்கப்பூரின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்களிக்கும் என்றும் துணைப் பிரதமர் வோங் கூறியுள்ளார்.

இன நல்லிணக்கமும் பன்முகத்தன்மையும் கொண்ட முதியோர்களையும் உடற்குறையுள்ளோரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை சிங்கப்பூரர்கள் அமைக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் வியாழக்கிழமை நடந்த தனது முன்னேறும் சிங்கப்பூர் உரையாடல் நிகழ்ச்சியில் கூறினார்.

110 பங்கேற்பாளர்களுடன் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தில் இந்த உரையாடல் நடந்தேறியது.

கல்வி திட்டத்தை மேலும் எப்படி விரிவாக்கலாம், இளைஞர்களுக்கும் முதியோருக்கும் இடையே இருக்கும் தலைமுறை இடைவேளியை எப்படி இணைக்கலாம் போன்ற தலைப்புகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

நிதி அமைச்சருமான திரு வோங், பங்கேற்பாளர்களுக்கு நன்றி கூறி, முன்னேறும் சிங்கப்பூர் உரையாடல் அவர்களின் கருத்துகளை நினைவில் எடுத்துக் கொள்ளும் என்று உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையை அடைய அரசாங்கம் மட்டுமல்லாமல், சமூக அமைப்புகள் மற்றும் நிறுவன முதலாளிகள் சிங்கப்பூரர்களின் மனப்பான்மையஇ, எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் எப்படி மாற்றலாம் என்று எண்ண வேண்டும் என்று திரு வோங் கூறினார்.