தடைசெய்யப்பட்ட புகையிலை, சிகரெட்டுகள் தொடர்பான ஆறு குற்றச்சாட்டுகள்

தடைசெய்யப்பட்ட புகையிலை, சிகரெட்டுகள் தொடர்பான ஆறு குற்றச்சாட்டுகள்

2 mins read
b48fe44e-f591-4d53-af28-4c823ac1d820
-

செர்டிஸ் சிஸ்கோ துணை போலிஸ் படையை சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை தவறுதலாக பயன்படுத்தியக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இப்பொருள்களின் மதிப்பு $227 என்று கணிக்கப்படுகிறது.

அக்டோபர் 2021 முதல் ஜனவரி 2022 வரை இந்த குற்றங்களை புரிந்ததாக சியூ சூன் லூங்கின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை அன்று குற்றவியல் நம்பிக்கையை மீறியதற்காக நீதிமன்றத்தில் அவர் குற்றம் சட்டப்பட்டார்.

குற்றம் நடந்த போது அவர் செர்டிஸ் சிஸ்கோ துணை போலிஸ் படையில் பணியாற்றவில்லை என்று தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.

முகமது நோர் அமலி ஹல்மி, 33 , 'பீப்பள்ஸ் எட்வாண்டேஜ்'' என்ற நிறுவனத்தில் வேலை செய்யும் போது, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அறிக்கையில் தவறுதலான தகவல்களை கொடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறார். முஹம்மது டேனியல் ஹஸ்லி ரோஸ்லி மற்றும் தியாங்கோ ஜன்னா மாரா கபலோனா என்ற இரு சந்தேக நபர்களுக்கு அவர் உதவியுள்ளார் என்ற சந்தேகிக்கப்படுகிறது.

ஸ்டீவன் நிக் கேப்ரியல், 29, விஜயன் சர்கரென், 30, மோகன் ராஜ் அகிலன், 31 மற்றும் சோங் வான் சியோங்,43 , ஆகியோர் அந்த நால்வர்.

மார்ச் 17 ஆம் தேதி அன்று அவர் இரு வேறு நபர்களின் கையெழுத்தை தவறுதலாக போட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் மீது இரண்டு குற்றச் சாட்டுகள் உள்ளன.

டேனியல், தியாங்கோ பற்றிய விவரங்களை நீதிமன்றம் வெளியிடவில்லை.

மோகன், ஜூன் 2021 இலிருந்து ஜூலை 2021 வரை நாற்பது மின் சிகரெட்டுகளை பெற்றதாகவும் அதன் மதிப்பு $1,417 என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆறு பேர் மீதும் தடைசெய்யப்பட்ட புகையிலையும் சிகரெட்டுகளும் வைத்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட ஆறு பேரும் மலேசிய நாட்டை சேர்ந்தவர்கள். ஆறு பேரும் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு நவம்பர் 18 ஆம் தேதியில் ஒப்புக் கொள்ளப்போவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது