அங் மோ கியோ கட்டட மறிப்பு: ஊழியர்களின் சம்பள பாக்கி வழங்கப்பட்டு விட்டது

அங் மோ கியோ கட்டட மறிப்பு: ஊழியர்களின் சம்பள பாக்கி வழங்கப்பட்டு விட்டது

1 mins read
e097290e-ce6d-4b9c-861e-aef3f1996696
-

இந்த வாரத் தொடக்­கத்­தில் அங் மோ கியோ­வில் உள்ள கட்­டு­மா­னத் தளத்­தின் நுழை­வா­யிலை வாக­னத்தை நிறுத்தி மறித்­த­னர் பத்து வெளி­நாட்டு ஊழி­யர்­கள்.

தங்­க­ளுக்கு சம்­பள பாக்கி இருப்­ப­தாக அவர்­கள் கூறி­னர். அவர்­களில் ஐவ­ரின் சம்­பள பாக்­கியை ஸெங்டா கார்ப்­ப­ரே­ஷன் நிறு­வ­னம் வழங்­கி­யி­ருப்­ப­தாக மனி­த­வள அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­று­வ­னத்தை வேலைக்கு அமர்த்­திய முதன்மை குத்­தகை நிறு­வ­ன­மான ஷாங்­காய் சோங் கீ நிறு­வ­ன­மும் அதன் ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள பாக்கி வைத்­தி­ருப்­ப­தாக அமைச்சு ஃபேஸ்புக்­கில் குறிப்­பிட்­டுள்­ளது. எத்­தனை ஊழி­யர்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று இன்­னும் தெரி­ய­வில்லை என்­றும் அது­கு­றித்து விசா­ரணை தொடர்­வ­தா­க­வும் அமைச்சு கூறி­யது.

வேலைவாய்ப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் இழைக்கப்பட்டதா என்பது தொடர்பில் இரு நிறுவனங்களும் விசாரிக்கப்படுவதாகவும் மனிதவள அமைச்சு கூறியுள்ளது.