சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கு இருவகை திறன் தடுப்பூசி

சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கு இருவகை திறன் தடுப்பூசி

2 mins read
ce114b3f-647c-475d-8e89-fa39302e13dd
-

வரும் செவ்­வாய்க்­கி­ழமை முதல் தகு­தி­பெ­றும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் மொடர்­னா­வின் 'ஸ்பைக்­வேக்ஸ்' இரு­வகை திறன் கொண்ட கொவிட்-19 தடுப்­பூசியைப் போட்டுக்­கொள்­ள­லாம். கொ­விட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கும் அபா­யம் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்கு அதி­கம் இருப்­ப­தால் இந்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

18 வய­தைத் தாண்­டிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் இரு­வகை திறன் கொண்ட தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­லாம் என்று சுகா­தார அமைச்சு நேற்று அறி­வித்­தது. இரு­வகை தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­வ­தற்­குக் குறைந்­தது ஐந்து மாதங்­க­ளுக்கு முன்பு அவர்­கள் கடைசி தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டி­ருக்­க­வேண்­டும் என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது.

தீவெங்­கும் உள்ள ஒன்­பது ஒருங்­கி­ணைந்த பரி­சோ­தனை, தடுப்­பூசி நிலை­யங்­க­ளில் ­ஒன்­றுக்­குச் சென்று சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் புதிய தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­லாம். முன்­ப­திவு செய்­து­கொள்­ளத் தேவை­யில்லை.

இரு­வகை திறன் கொண்ட தடுப்­பூ­சி­யைப் போட்டுக்­கொள்ள தங்­க­ளின் பெயர்­க­ள் உள்ள தகுந்த சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு அடை­யாள அட்­டையை ஒருங்­கி­ணைந்த பரி­சோ­தனை, தடுப்­பூசி நிலை­யத்­தில் காட்­ட­வேண்­டும் என்று சுகா­தார அமைச்சு சுட்­டி­யது. அடை­யாள அட்டை இல்­லா­தோர் தங்களின் நிறு­வ­னம் அல்­லது அமைப்­பின் பெயர் பதி­வி­டப்­பட்ட அதி­கா­ர­பூர்வ கடிதத்தை சமர்ப்­பிக்­க­வேண்­டும்.

வேலை கார­ண­மாக நிலை­யங்­களுக்­குச் சென்று தடுப்­பூசி போட்டுக்­கொள்ள முடி­யாத சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்­குப் புதிய தடுப்­பூ­சி­ போட அவர்­கள் வேலை செய்­யும் நிறு­வ­னங்­கள் அல்­லது அமைப்­பு­கள் தேவை­யான ஏற்­பா­டு­க­ளைச் செய்து தரலாம்.

முதன்­மு­த­லில் தலை­தூக்­கிய கொவிட்-19 கிருமி வகை, ஓமிக்­கிருமி ஆகிய இரண்­டுக்­கும் எதி­ராக புதிய தடுப்­பூசி பாது­காப்பு வழங்­கு­கிறது. நேற்று முன்­தின நில­வ­ரப்­படி 28,000க்கும் அதி­க­மானோர் இந்தத் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர் அல்­லது அதற்­கா­கப் பதி­வு­செய்­துள்­ள­னர் என்று சுகாதார அமைச்சு தெரி­வித்­தது.