நான்கு மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் ஓர் ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான 26 வயது சோ டெக் எர்ன் மீது நேற்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
வேண்டுமென்றே அரசாங்க ஊழியர்களுக்குக் காயம் விளைவித்ததன் தொடர்பில் அவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் பெட்டிர் சாலையில் இருக்கும் ஓர் அடுக்குமாடி வீட்டில் நேற்று முன்தினம் அதிகாலை ஐந்து மணியளவில் சோ குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
ஒருவர் போதைப்பொருள் உட்கொண்டதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டதாக காவல்துறையும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் தெரிவித்தன. அப்போது சோ, மத்திய போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகளைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.
அப்போது நான்கு அதிகாரிகளுக்கு உடலின் சில பகுதிகளில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

