தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், சிகரெட்டுகள் ஆகியவை சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பில் அறுவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 33 வயது சியூ சூன் லூங், 35 வயது முகம்மது நூர் அமாலி ஹல்மி, 29 வயது ஸ்டீவன் நிக் கேப்ரியல், 30 வயது விஜயன் சர்கரன், 31 வயது மோகன் ராஜ் அகிலன், 43 வயது சோங் வான் சியோங் ஆகியோர் அந்த அறுவர்.
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் போன்ற திருடப்பட்ட பொருள்களை சட்டவிரோதமாகப் பெற்றதாக அவர்கள் சந்தேகிக்கப்படுகின்றனர். அரசாங்க ஊழியர் ஒருவர் அத்தகைய பொருள்களை சட்டவிரோதமாகக் கைமாற்றியதாகக் கூறப்படுகிறது. நீதிமன்ற ஆவணங்களில் அந்த அரசாங்க ஊழியரின் அடையாளம் வெளியிடப்படவில்லை.
நம்பிக்கை மோசடி, போலி ஆவணங்களைத் தயார்ப்படுத்தியது உள்ளிட்டவற்றின் தொடர்பில் அந்த அறுவர் மீது நேற்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சந்தேக நபர்கள் அனைவரும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள்.

